பயமா இருக்கு
அருவருப்பான ஒரு சினிமாவை
ஐய்யோ காதல் காதலென்று உருகுகிறாய்
பிறந்ததே இதுக்குதான் என்பதுபோல்
எப்போதும் உன் நினைவுகளில்
ஒரு அழகான இளம்பெண்ணோ,பல்சர் பைக்கோ
எந்த ஒரு புதிய சினிமா பாடலும்
உடனே தரவிறக்கம் செய்கிறாய்
உன் ஆன்ராய்டு போனில்
நண்பகளுடன் குடித்து கூத்தடிததை
சொல்லி சொல்லி காட்டுகிறாய் பத்து தடவையாவது
கூட்டமாய் கேலிசெய்து சிரிக்கிறாய்
தவமாய் தவமிருந்து படம் நன்றாயிருப்பதாய்
நான் சொல்லியதை சொல்லி
அனிரூத் மியூசிக்கே அபாரம் என்கிறாய்
ஆவணப்படத்திற்கும்,வேதாளம் படத்திற்கும்
வித்தியாசம் தெரியாது உனக்கு
உன்னுடன் பழகுவதே பயமா இருக்கு
நான்தான் பைத்தியமாய்
இருக்கிறனோ என்று