பள்ளிமலர்கள்

மகளிர் கல்லூரி மலர்வனத்தின்
மண்ணில் விளைந்த பூக்கள் நாம்
வாசம்வீசி வலம்வந்த
வண்ண வண்ண மலர்கள் நாம்

கற்றது கொஞ்சம்
கற்காதது அதிகம்
ஆனாலும் நாங்கள்
உதிராத மலர்கள்

சண்டைகள் போட்டாலும்
சட்டைகள் கிழிந்ததில்லை
திட்டிக்கொண்டாலும்
நெஞ்சில் வஞ்சமில்லை

போட்டிகள் ஏராளம் ஆனாலும்
பொறாமை கொண்டதில்லை
தோல்விகள் ஆயிரம் ஆனாலும்
துவண்டு போனதில்லை

ஒற்றை சைக்கிளில்
மூவராய் போனதும்
ஒளிந்து நின்று
பட்டங்கள் சொல்வதும்

கூடிக்கதைகள் கதைப்பதும்
கொஞ்சம் பொய்கள் சொல்வதும்
கேலிப் பேச்சு பேசியும்
கிண்டலடித்துச் சிரிப்பதும்

வாலுத்தனம் புரிவதும்
வாயை மூடிச் சிரிப்பதும்
வேஷம் போட்டு நடிப்பதும்
கோபம் போட்டு பிரிவதும்

பசுமையாய் மனதினில்
பதிந்துவிட்ட நினைவுகள்
வாழ்வினில் ஒருமுறை
வந்துபோன நினைவுகள்

சோகங்கள் வந்து சூழ்கையில்
தோழியின் தோள்கள்
துணையாய் தலாட்டும்
தூய்மை உறவு பள்ளிநட்பு....

எழுதியவர் : கோணேஸ்சர்மி (7-Jan-16, 11:50 am)
சேர்த்தது : கோணேஸ்சர்மி
பார்வை : 236

மேலே