அழகிய காதல்
அனைவரும்
ஆடை துவைக்கையில்
அழுக்கு வெளியேறிக்கொண்டிருக்க
அவள் ஆடையிலிருந்துமட்டும்
அழகு வெளியேறிக்கொண்டிருந்தது
அவள் பாதத்தை
பாதபூஜை செய்யும்போதுதான்
பாதரசம் கிடைக்கிறது
அவள் சாதத்தைத்தான்
வடித்தாள்
பழரசம் வடிந்தது
ஆண்களின் கண்களைப்பார்த்தபோது
கண்நோய் வந்தது
அவளின் கண்களைப்பார்த்தபோதுதான்
காதல் நோய் வந்தது
மருத்துவரிடம் சென்றேன்
மனதை எக்ஸ் ரே எடுத்தார்
அதில் எலும்பகம் தெரியவில்லை
அவள் எழில்முகம் தெரிந்தது

