கூட்டணி தேர்தல்
தேர்தல் வருகிறது ;
தெருவெல்லாம் கூட்டம் !
வாக்கை வசமாக்க ;
வகை வகையாய்
வாக்குறுதி !
கூடும் இடமெல்லாம்
கூட்டணிப்பேச்சி !
தூண்டிலில் சிக்கும் சில
துண்டு கட்சிகள் !
குழுவாய் பிரிந்து
கூட்டணி சேர்க்க - சில
பெட்டியின் முன்பு
பார்ட்டியும் மாறும் !
மாறும் பெட்டியில்
மாற்றம் இல்லை !
உன்னை அறிந்திடு!
உன் வாக்கை அளித்திடு !
தெரு கோடியில் இருப்பவனும்
கோடீஸ்வரன் ஆவான் !
தெளிவாய் நீ
இல்லையெனில் !

