நியதி
வாழ்க்கை என்ற பயணத்தில்
வந்து போகும் வசந்தங்கள்
கடந்து போகம் துன்பங்கள்!
காட்சி பிழையாய் சொந்தங்கள்
கண்ணின் இமையாய் நண்பர்கள்
இறந்த கால எண்ணங்கள்
இம்சையான நினைவுகள்
இலக்கு வைத்து வாழ்க்கையிலே
இலக்கணமில்லா நியாயங்கள்
இன்று போல் நாளை இல்லை
இறந்து குடிக்கும் வாழ்க்கையிது
ஈர்ப்பு கவர்ச்சி மாயையிது
மற்றவையில் சிறந்து
மதிநுட்பமாய் வாழும்
மண்ணில் பிறந்த அற்புதம் நாம்
ஆசையின் ஆணவத்தில் அடிமையாகாமல்
அன்பின் அரவணைப்பில் அகமும் புறமும்
ஆனந்தம் கொள்வோமே!