பரண்

முனையுடைந்த கலர் பென்சில்கள்..
பல வண்ணங்களில் சிறு வளையல்கள்..
பிரில் வைத்த குட்டைப் பாவாடையணிந்து
ஆரஞ்சு வர்ண நெகிழி பொம்மை ..
அதன் சிறிய முகத்தின் மேல்
ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டு..
நட்சத்திர வடிவத்தில்
தங்க வண்ண ஜிகினா தாள்..
பாசிமாலையின் சில முத்துக்கள்..
சிறு விளையாட்டு பாத்திரங்கள்....மற்றும் பல..

பரண்மேல் வைத்திருந்த
மரத்தொட்டிலை எடுக்கும்போது
கையோடு வந்த அட்டைபெட்டியில் இருந்தவை..
நாளை என் மகள்
மருத்துவமனையிலிருந்து வருகிறாள்
அவள் பெற்றெடுத்த என் பேத்தியை எடுத்துக் கொண்டு..

எழுதியவர் : ஜி ராஜன் (7-Jan-16, 12:46 pm)
Tanglish : paran
பார்வை : 134

மேலே