கருக்கலைப்பு
தவறுகள் நீ செய்ய ;
தண்டனைகள் எனக்காம்மா ?
தவறென்ன நான் செய்தேன் ?
தண்டனையும் தரும்தாயே !
தேதியையும் குறித்துவிட்டாய் !
அழிப்பதற்கும் துணிந்துவிட்டாய் !
கண்ணீரும் சிந்தாதே ;
களைந்திடுவேன் நானாக !
உன் மகிழ்சியிலே
நான் மலர்ந்தேன் !
உன் மடியினிலே
இடமில்லை !
அற்பம் ஒன்றும் நானில்லை
அதிர்ஷ்டம் மட்டும்
எனக்கில்லை !
அடுத்த ஜென்மம் இருந்துவிட்டால்
அழகாய் உன்னை பெற்றெடுப்பேன் !