பழமையான தெய்வம் தமிழ்
காலத்தில் மாற்றம் வந்தாலும்
உன் மீது கொண்ட காதலில் மாற்றம் இல்லை தமிழே!...
பிறக்கும் குழந்தை முதல்
இறப்பின் கல்லரை வரை உன் பயணம் தொடர்கிறது...
பாரதி முதல் நான் வரை
உன் மீது கொண்ட மோகம்...
எழுத்தில் தொடங்கி இதயம் வரை
எனக்குள் என்றும் நீ தான் மொழியே இனியவை .. நீயே...!
குழந்தையின் தெய்வம் நீ
நல் வழிகாட்டி நீ
உனக்கு உருவம் எழுது...
உனக்கு உணர்வு வாசகம்..
உன் அழகு கையெழுத்து ...
உன் பிறப்பை"கணிக்க இந்த"யுகத்தில் முடியாது
முற்று புள்ளி வைத்தாலும் முடியாத இறைவன் தமிழ் ....
நெஞ்சம் ஏங்கும் ஏக்கம் எல்லாம் நீ...
ஆத்துமாவின் ஔஷதம்.. நீ
நீ இல்லாமல் கவிஞன் இல்லை
எழுது என்ற இனையம் கூட உன் அருள் தான்
வழிபாடுக்கு உரியவன் நீதான்