வீழப் போமோ எம்மாட்சி

தேடி வருமோ படகென்று -நெஞ்சு
தினமும் பதைத்த நாளுண்டு!- மனம்
வாடித் துவண்டு பசியோடும்- வேறு
வழியும் இன்றிக் கடலுள்ளோ- நாங்கள்
வாழ வீடும் கட்டினமோ?- எனக்
கூடித் தனித்துப் புலம்பினமே!-அந்தக்
கொஞ்ச நாட்கள் மறந்திடுமோ?
வேடிக் கையோ, குடியாட்சி? -இனியும்
வீழப் போமோ எம்மாட்சி?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-Jan-16, 7:39 pm)
பார்வை : 49

மேலே