பூனைக்கும் ஒரு காலம் ஏனைய- வசன கவிதை

அந்நியர் ஆட்சியில்
அடிமைப் பட்டு மட்டுமல்ல
அறிவில்லாதவர்களாகவுமல்லவா இருந்துள்ளோம்!
நம் நாட்டின்
கனிம இயற்கை வளங்களை
நாமறியா வண்ணமே
'அவர்கள்'
சுரண்டிக் கொண்டுசென்றுள்ளனர்!
எவ்வளவு ஏற்றுமதி வாய்ப்புகள்
அந்நியச் செலாவணிகளை இழந்துள்ளோம்!
சுதந்திரம் மட்டும்
கிடைக்காவிட்டால் இந்தச்
சுரண்டல்களையும் இழப்புகளையும்
அறிந்திருப்போமா..?

இப்பொழுதுதானே
நமது அரசியல்வாதிகள்
'அவர்களது' நாட்டில்
சொத்துக்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்;
இனிதான் தெரியும் 'அவர்களுக்கு'
யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்கும் ஒரு காலம் வருமென்பது...!!
====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-Jan-16, 8:00 pm)
பார்வை : 100

மேலே