கலைஞர் என்னும் இளைஞரே
அஞ்சுகம் ஈன்றெடுத்த அருந்தமிழ் புதல்வா,
தன்சுகம் காணா தரணிஆள் தலைவா,
திருவாவூருக்கு தேராலா புகழ்,இல்லை,இல்லை.உன் திருமேனி சுமந்ததால் அந்தஊருக்கு புகழ்.
முத்தமிழும் உன்னைப்போற்றும்.
முத்தமிட்டு அன்பைக்கூட்டும்.
அண்ணாவின் அடி பற்றியதால் நீ செந் 'நா'பெற்றாயோ?பொன்னான தமிழும் உன்னால் பொன் மகுடம் சூட்டிக்கொள்ளும்.
வருகின்ற காலமெல்லாம் பைந்தமிழும் உன்னை போற்றிச்சொல்லும்.
வருகின்ற காலனும் உன் தமிழ் கேட்டு தானாக தூரச்செல்லும்.உன் சிலேடை வார்த்தையால் எனக்குள் சிலிர்த்துப்போனதுண்டு.
உன் பலமேடை வார்த்தையில் நான் சிலையாகி நின்றதுண்டு.
தமிழ்க்காதலனே, தமிழ்சுடர் அணையாமல் காத்துக்கொள்.ஏனெனில் நீயும்,தமிழும் வேறல்ல....