தரிசனம் தருவாயே

தரிசனம் தருவாயே!

விழலுக்கு இறைக்கின்ற நீரெனவே வாழ்க்கை
விடியமென நம்புகிறேன் என்றும் நம்பிக்கை!
குழல்கொண்டு பாட்டிசைக்கும் கண்ணா !
குரல்கொண்டு அழைக்கின்றேன் மன்னா !

குறுநகையால் கோபியரைக் கவர்ந்த கள்ளன்!
கூந்தல்தனைப் பிடித்திழுத்து குறும்பான பிள்ளை!
சாந்தமிகு சுந்தரமே! சாரதியே சர்வேசா!
சாமர்த்தியமாய் விளையாடும் மதுசூதனா!

அநிரைக் கூட்டமும்அசையாது நிற்கும் மாயமோ!
ஆனந்தமாய் நித்திரையில் ஆழ்ந்திருத்தல் நியாமோ?
தேவகியின் மைந்தனே! தேருக்கு சாரதியே!
திருவரங்க பெருமானே! தரிசனம் தருவாயே!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (8-Jan-16, 8:43 pm)
பார்வை : 123

மேலே