மழை
அதிகாலை நடை பயணம்
ஆலயத்தின் மணி ஓசை அங்கே ஒலிக்கிறது!
பறவைகளின் பாடல்களும் கேட்க்கிறது!
விளைந்து நிமிர்கிறேன் விடியலை காண்பதற்கு-அங்கே
மங்கையரின் மூக்குத்தியின் ஒளியாய்
மின்னும் நட்சத்திரக் கூட்டத்தை
கார்மேகங்கள் கட்டி அனைத்திருந்தது!
வெண்புகை சூழ்ந்த பனிச் சாரல்
சாலையின் பள்ளம் மேடுகளை மறைத்திருந்தது!-அந்நேரம்
வெள்ளிக் கொடிகள் தோன்றலில்
சிதறிய அதிர் முழக்கங்களோடு
சில்லென்று ஒரு முத்தம்.....
முதல் துளி சிந்தியது மழை!!!