முகவரியற்ற மேகம்

மறதியும் மாற்றமுமாய் கடந்து சென்ற ஆறு வருடங்களுக்குப் பிறகு...
இன்று...
காதலர்தினத்தில்.....
கடல்கடந்த நாட்டின் கப்பல் பயணதில்....
முழ்கிப்போன என் காதல் சுவடுகளை திருபிப்பார்கிரேன்....
கல்லுரி நட்புக்கு மட்டுமல்ல...
காதலுக்கும் தானே ...
காதல் காற்று என்னை உரசிசெல்ல,குலம்பிபோனேன்..
.முதல் காதல் அல்லவா...
விடுமுறை நாட்களை வெறுத்தேன்...
அவள் அருகில் வரும்பொழுது என்னையும் மறந்தேன்...
தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனாய்....
தூது அனுப்பிய என் காதல் முடிவுக்காகவும் காத்திருந்தேன் ...
தேர்ச்சியும்பெற்றேன்,சரிந்தேன் நானும் காதலில்....
அவள் சிரிப்பொலி சங்கீதமானது,
அவள் குரலொலி பாடலானது,
அவள் கையெழுத்து கூட கவிதையாகதான் தெரிந்தது......
அவள் உதட்டில் பிறக்கும் என் பெயர்கூட அழகாகத்தான் ஒலித்தது...
மீண்டும் மழலையானேன் உன் மகிழ்ச்சியை ரசிக்கும்போது...
கடைசிவரை வாழ்க்கை பயணத்தில் சேர்ந்து பயணிப்போம் என்று
என்னும் வேலையில் கடவுள்தந்த பரிசு கல்லூரியின் இறுதி நாள்.....
இமைகள் சுமக்கமுடியாத கண்ணீர்துளிகளோடு.........
அவள் சொன்ன என் காதலின் கடைசி கவிதை.....
"காலம் நமக்கு துணையிருந்தால் இது நம் கடைசி சந்திப்பகாது"
காதலால் விலங்கிட்டு ,நினைவுகளால் சிறையில் அடைத்துவிட்டு சென்றுவிட்டால்....
வாழ்க்கை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் நிரப்ப
அவளின் நினைவுகளை மெல்ல மெல்ல மறந்தேன்....
ஆனால் காதலெனும் பக்கம் மட்டும் இன்னும் வெற்றிடமாகத்தானிருக்கிறது....
இன்னும் ,
காலம் நமக்கு துணையிருக்கவில்லையா.................?

எழுதியவர் : சந்தோஷ் (9-Jan-16, 11:38 pm)
பார்வை : 95

மேலே