உம் பொண்ணு சுமிதா-ன்னா எம் பொண்ணு கமிதா-தாடா

நண்பா போன வாரமே உன்னோட மனைவிக்கு பெண் கொழந்தை பொறந்திருக்குன்னு சொன்னியே, தாயும் சேயும் நலமா இருக்காங்களா?
ரண்டு பேரும் நல்லா இருக்காங்கடா.
அவுங்கள வந்து பாக்கமுடியாம போச்சு. அடுத்த வாரம் வர்றண்டா. சரி கொழந்தைக்கு என்ன பேரு வைக்கறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?
ஓ அவ பொறக்கறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே முடிவான பேருடா. பெண் கொழந்தையாப் பொறந்தா கமிதா-ன்னு பேரு வைக்கறதா சாமிகிட்ட வேண்டிட்டேண்டா.
என்னது? கமிதா- வா? நா இதுவரைக்கும் அந்த மாதிரி பேரக் கேள்விப்பட்டதில்லையே.
அட நண்பா, உனக்கு மட்டுந்தா உம் பொண்ணுக்கு இந்திப் பேர வைக்க தெரியுமா? உம் பொண்ணு சுமிதா-ன்னா எம் பொண்ணு கமிதா-டா.
நாந் தா நடிகை சில்க் சுமிதாவின் தீவிர ரசிகன். அவுங்க நினைவு நாள்ல எம் பொண்ணு பொறந்ததால அவளுக்கு சுமிதா-ன்னு பேரு வச்சேன். நீயேண்டா உம் பொண்ணுக்கு கமிதா-ன்னு பேரு வைக்கப்போற?
டேய் நண்பா. இப்பெல்லாம் பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறது தான் தமிழர் பண்பாடு. உம் பொண்ணோட பேருக்கான அர்த்தம் உனக்குத் தெரியாது. எம் பொண்ணோட பேருக்கு என்ன அர்த்தம்னு எனக்குந் தெரியாது.
--+++++++-------
சுமிதா பெண்பால் பெயர் =நல்ல தோழி, நட்புடைய
கமிதா வும் பெண்பால் பெயரே = ஆசை, அன்பு, காதல், காதலர் நிலை
==_______________=====
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
நன்றி: கூகுலில் சில வலைத் தளங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
Sumita
Meaning of name 'Sumita' in different Region (Origin)
Origin In Local Sumita means Gender
Indian
Good friend; Friendly
Girl
సుమీతా; സുമീതാ; সুমীতা; ਸੁਮੀਤਾ; ಸುಮೀತಾ; સુમીતા; सुमिता; ஸுமீதா
Meaning of Kamita
In Sanskrit Kamita means 'love, desire or state of a lover'.
Kamita कामिता
Gender : Girl