காதல் கிறுக்கு

நெஞ்சம் அது தேடுதடி உன்னை
நீயும் இல்லையென்றால் சோகம் வாட்டும் என்னை
அடி நாணம்தான்
இங்கு ஏனம்மா
நீயும் எனக்கேற்ற வண்ண பொன்னம்மா

வான் நிலவில் வெண்மை அது யாரு தந்தது
வானம் அது வந்த போதே சேர்ந்து வந்தது
உன் மேல் காதல் எனக்கு இங்கே எப்போ வந்தது
உன்னை பார்த்தபோதே நெஞ்சுக்குள்ளே பூத்துவிட்டது
நீயில்லாம நானுமில்லை
நானில்லாம நீயும் இல்ல
வண்ணக்கிளி வாய் திறந்து
சொல்லு ஒரு பூங்கவிதை
உன்னால் இங்கு எனக்கு
நித்தம் காதல் கிறுக்கு
முத்துபனி பட்டுத்துணி நீதானே..

சூடான பாலையிலே மழையும் நீயம்மா
குளிரான தேசத்தில வெப்பம் நீயம்மா
தங்க பெண்ணே உன் அழகை
என்ன சொல்லி நானும் பாட
கீழே விழும் நீர்வீழ்ச்சியும்
மேலே வரும் உன்னை பார்க்க
சொர்க்கம் அது எதற்கு
சொந்தம் ஆன பிறகு
நீயிருக்கும் இல்லம் எந்தன் இதயம் தானே.......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (12-Jan-16, 1:39 am)
Tanglish : kaadhal kirukku
பார்வை : 186

மேலே