உன் நினைவு
உன் நினைவு
என்ன
கானல் நீரா....?
இல்லையடி.....
இது
காலமெல்லாம்
தீராத
வலியடி....!!
உன் மார்பில்
விழிமூடித்
தூங்கிட
என் விழிகளும்
விரும்புதடி......ஏனோ
உன் மனம்
தர
மறுக்குதே.....!!
தினம்
தினம் உருகும்
இவன் மனதில்
உன்னுருவம்
உருக்குலைத்துப்
போடுதடி
என்னை....!!
இடைவெளிகள்
நமக்கில்லை
என்று
நம்பியிருந்தோம்.....
இன்று
இருவேறு
திக்கில்
தொலைந்து
போனோம்.....!!
அறிவும் அன்பும்
அவ
நம்பிக்கையால்
அனாதையாக்கி
விட்டது
என்னை....!!
பாடப் புத்தக
பக்கங்களை
தேடாத
என் காலங்கள்.....
நிகழ்கால
சோகங்கள்.....!!
அறிவிழந்த
அனாதையாக
இங்கிருந்து
வருந்துகிறேன்......
அறிந்து
வருவாய்
என்றெண்ணி.....!!
இதயம்
மாறி மாறித்
துடிக்கும்.....
ஓரிடத்தில்......இடம்
மாறியல்ல.....!!
உனக்கும்
சேர்த்து துடித்தது
ஒருகாலம்.....
உனக்காக
மட்டுமே
துடிப்பேன்
இதுவே என்
நிகழ்காலம்....!!
புரியாத
பிரிதல்.....
புரிந்துகொண்டால்
பிரியம்
கூடுமோ....???