இது அதுவேதான் - உதயா

நீல நிறக்கட்டியொன்று
நீருடன் சேர்ந்து
வெவ்வேறு வடிவம் கொண்ட
மெத்தையில் புரளுகிறது

நெருக்கம் இறுக இறுக
புரட்டலின் வேகம் கூட கூட
வெண்மை குமிழ்களை
உழிந்தவாறே
நிறமாறிக் கொள்கிறது

மெதுவாய் ஊர்ந்து
மெத்தையை ஒதுக்கி
நெருங்கி பிணைந்து
பதமாய் இதமாய்
வெண்மை குமிழ்களின்
பவனி தொடர்கிறது

கூடலும் பவனியும்
ஓய்ந்த பின்
வெண்மை குமிழ்கள்
சட்டென்று கானலில் நுழைகிறது

கூடலின் இறுக்கம்
மெதுவாக தளர
நிறமாற்றத்துடன்
நீர் எழுகிறது

திடீரென்று வந்த
ஒரு சுனாமி
அனைத்தையும்
தெறிக்க விட்டு போகிறது

மீண்டும் நாளை
இதே நேரத்திலோ
இல்லை சற்று நேரம்
குறைந்தோ அதிகரித்தோ
இதேபோல் மீண்டும் தொடரலாம்
இல்லை தொடராமலும் போகலாம்

- உதயா

( குறிப்பு : இது என்ன பாடு பொருள் என்று அனைவரும் குழப்பத்தில் விழாதீர்கள் .... இது ... சோப்பு ,தண்ணீர் , துணி ... அதாவது துணி துவைப்பதாகும் ... ஹா ஹா ஹா ஹா .....)

எழுதியவர் : உதயா (12-Jan-16, 12:16 pm)
பார்வை : 90

மேலே