வாடகை வீடு

தேவதாசிகளின்
பகற்பொழுதுகளைப் போல
வெறிச்சோடிக் கிடக்கிறது
சற்று முன்னர் காலி செய்த
எங்கள்
வாடகை வீடு

பால் கணக்குக்காய்
அம்மா கிழித்த
கரிக்கோடு

அப்பாவின்
சிகரெட் புகைப்பட்ட
கருஞ் சுவர்கள்

பாட்டியின்
இடிப்பானிலிருந்து
தெறித்த வெற்றிலைச் சாறு

என் தம்பி வரைந்த
நாய் மாதிரி
ஒரு நாயோவியம்

அவள் சாய்ந்த இடமென்பதற்காய்
நான் போட்டு வைத்த
பெருக்கல் குறி

என
எல்லாமே மறைந்து போகும்
வீட்டுக்காரர் வெள்ளையடிக்கிற பொழுதில்

மாலை வரவுக்காய்
பூச்சூடும்
வாடகை பெண் போல
வாடகை வீடும்...

எழுதியவர் : (12-Jan-16, 12:16 pm)
Tanglish : vaadagai veedu
பார்வை : 700

மேலே