ஒரு திருநங்கையின் மனம்
ஹாய் ஸ்வீடி,ஹவ் ஆர் யூ?,என்ன ரெண்டு நாளா ஆள காணும்?",என்றான் கிஷோர்!
பலருக்கு கண்ணீரில் ஆரம்பிக்கும் காதல்,கிஷோருக்கும் ரமணிக்கும் இடையில் வார்த்தையில் ஆரம்பித்தன!!
ஆம்,இது ஒரு முகபுத்தக காதல்!!
"சாரி டா,வீட்லஅப்பா அம்மா மொபைல் யூஸ் பண்ணினா இப்போலாம் ரொம்ப திட்டறாங்க,தாங்கிக்க முடியல,அதும் இல்லாம புது வீட்ல வேற ஏகப்பட்ட வேலை,அதான் டா வர முடியல ,சாரி டா,ப்ளீஸ்!"என்றாள் ரமணி.
வார்த்தை பரிமாற்றங்களோடு காதலும் பரிமாறப்பட்டது.அப்பாவின் வருகையால் அன்று பரிமாற்றங்கள் தடைபட்டன.
'யாராவது சற்று குரலை உயர்த்தி பேசினாலும் தன் மீது வெறுப்பு காட்டுகின்றனர் ",என்று நினைக்கும் அப்பாவி மனோபாவம் கொண்டவள்,ரமணி.
அத்தகைய ரமணிக்கு கிஷோரின் வார்த்தைகள் இதம் அளித்தன.
ஒவ்வொரு நொடியும் அவனிடம் எப்படிடா பேசுவது என்று அவள் தவம் கிடந்தாள்.
அவளுடைய அன்றாடம் வேலைகளுக்குள் கிஷோரின் நினைப்புகள் புகுந்து அவளை பாடாய் படுத்தின.
அவனது வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் அவள் மனத்தில் காதலை அழுத்தமாய் வேரூன்றின.
அவனது வார்த்தைகளை கொண்டு அவனது அன்பையும்,தன் பெற்றோர் அன்பையும் அந்த அப்பாவி மனம் கணக்கு போட்டு ஆரம்பித்தது.
கிஷோர் தான் தன்னுடைய பயணம்,வாழ்கை,உயிர் என்ற முடிவுக்கு வந்தாள் ரமணி.
இன்று கிஷோரோடு ரமணி பேச ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகின்றன.
"செல்லம் உங்க அப்பா அம்மா நம்ப லவ்-கு ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்னேன்ல ,நீ எதுக்கும் பயபடாத ,எங்க வீட்டுல எல்லார்டையும் நான் பேசிட்டேன்.
நீ பிரின்ட் வீட்டுக்கு போறேன்னு சொலிட்டு நாளைக்கு சென்னை வா டா.எனக்கு இங்க வொர்க் இருக்குறதால எனால இபோ அங்க வர முடில.சாரி டா.நாளைக்கு இங்க நீ வந்த உடனே நம்ப கல்யாணம் செஞ்சிட்டு என் அப்பா அம்மா ஓட உன் வீட்டுக்குஉடனே போறோம்.நம்பள ஏத்துப்பாங்க.வைடிங் பார் யூ",என்றான் கிஷோர்.
கிஷோர் மீது ரமணி வைத்துள்ள கண் மூடிதனமான காதலும்,அவன் வார்த்தை மீது அவள் வைத்துள்ள அளவில்லா நம்பிக்கையும் அவளை சென்னை நோக்கி பிரயானப்படுத்தின.
அப்பாவையும் அம்மாவையும் சமாதனப்படுத்தி சென்னை நோக்கி தன் காதலை காண விரைந்தாள்.
அவள் ஆர்வக்கன்கள் சென்னையில் தரை இறங்கின.
"செல்லம்,நீ பீச்ல வெயிட் பண்ணு டா.நான் இன்னும்10 மினிட்ஸ்ல வந்திட்ரன்",என்றது ரமணியின் காதல்.
அவள் காத்திருந்த நொடிகளில் கிஷோர் பேசிய வார்த்தைகள் ரமணியின் மனத்தில் ஓயாமல் காதலை ஒலித்துகொண்டிருந்தன.அவன் எப்படி இருப்பான்,எந்த ஆடை உடுத்தி வருவான் என்றெல்லாம் அவள் மனம் யோசிக்கவில்லை.
அவன பாக்கணும் சீக்கிரம்,ரொம்ப சீக்கிரமா... இதை மட்டும் தான் அவள் மனம் எண்ணி எண்ணி ஏங்கிக்கொண்டு இருந்தது.
ஒரு கடையை அடையாளமாக கொண்டு இருவரும் அந்த கடை நோக்கி விரைந்தனர்.
அப்பொழுது எதிரே வருவது ரமணி என கண்டறிந்தான். அவளை கண்ட உடனே கிஷோர் கண்களில் வெறுப்புபரவியது.
உடனே அங்கு இருந்து கிளம்பினான்.ரமணி ஒரு திருநங்கை.தன் காதலை காணாததும் கவலையே உருவானாள் ரமணி.ரமணியின் பல செல்போன் அழைப்புகளால் அவள் காதலை தொடர்புகொள்ள முடியவில்லை. மீண்டும் முயன்றாள்." ஏய்,எதுக்கு டி இப்போ call பண்ணி என் உசுர வாங்குற?",என்றான் கிஷோர். "கிஷோர் என்ன ஆச்சு உனக்கு?ஆர் யூ ஒகே?,ஏன் இப்படிலாம் பேசுற ",என்று பதறினாள் ரமணி.
"ஏய்,நீஒரு பொண்ணுன்னு நெனச்சிட்டு தான் உண்ட பேசின,நீ இப்டி ஒரு ஜென்மம்னு தெரிஞ்ச உன்ன அபையெய் கழட்டி விற்றுப்பன்",என்றது ரமணியின் காதல்.
"கிஷோர் நீ என் போட்டோ கூட கேகலையே, நீயா இப்டி பேசற ",என்று விசும்பியது அந்த அப்பாவி மனம்.
"எனக்கு தேவ சுகம் தான்,அதுக்கு நீ எப்டி இருந்தாலும் பரவால்ல . மொக்கையா இருந்த உன்ன அப்டியே விட்டிட்டு போய் இருப்பன்.
இப்டி என் மூட ஸ்பாயில் பண்ணுவனு நெனைக்கல.
"சீ போன்-அ வை டி", என்று அதட்டியது அவள் காதல் .
கிஷோர் தான் தன்னுடைய வாழ்கை என்று நினைத்த அப்பாவி மனதை இந்த வார்த்தைகள் சுக்குநூறாக்கிபோட்டன.
தற்கொலை செய்து கொள்ளவும் அந்த அப்பாவியின் மனம் துணியவில்லை. அப்பா, அம்மாவை ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி,கண்மூடி தனமாய் இப்படி இருந்துவிட்டோமே என்ற ஏமாற்றம் மாறி மாறி அவளை கொன்றுகொண்டிருந்தது , வாழ்க்கையில் அடுத்த அடி எங்கே எப்படி எடுத்து வைப்பது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை . வாழ்க்கையே தனக்கு முற்றுப்புள்ளி வைத்ததாய் கருதினாள்.
" டைம் ஆச்சு எலாரும் கெளம்புங்க",என்று போலீஸ் அங்கு மக்களை அதட்டிக்கொண்டு இருந்தனர்.
ஒளி இழந்த அவள் கண்கள் சாலை ஓரத்தை நோக்கி பிரயாணித்தன .
அப்பொழுது இரவு 12 மணி ,அங்கு ரோந்து பணியில் வந்த போலீஸ் " எவன கூட்டிகிட்டு போக நிக்குற ?",என்றனர் .
" சார் இதுவே ஒரு பொண்ண இருந்த இப்படி கேட்டு இருப்பீங்களசார் ?",என்று விம்மிய குரலில் ரமணி கேட்டாள்.
" இது மோசமான இடம்மா, இங்க எல்லாம் நிக்காத ,"என்று தலை குணிந்து கூறியது அவரது வார்த்தை . எங்கு செல்வது என்று தெரியாமல் அவள் கால்கள் ஏதோ ஒரு வழியை பின்பற்றி நடந்தன.
வழியில் ஆட்டோ வில் வந்த ஒரு கும்பல் " மச்சி செம ஐட்டம் டா! இவள விட கூடாது ",என்று பின் தொடர்ந்து ரமணியை ஆடோவினுள் அடைத்தனர் .
அந்த அப்பாவியின் அலறல் யார் காதுகளையும் அடையவில்லை .
பல போராட்டங்களுக்கு பிறகு எப்படியோ தப்பி பிழைத்து ஓட ஆரம்பித்தாள்.
அந்த கொடூர கூடமும் தன் வக்கிர இச்சையை அடைய அவளை பின் தொடர்ந்தது .
ஒரு சந்துக்குள் ஓடி அவள் ஒளிந்துகொண்டாள்.
அவள் பதறி கொண்டு ஓடி வருவதை கண்டு அருகில் தூங்கி கொண்டு இருந்த 10 வயது சிறுமி விழ்த்துகொண்டாள்.
"அக்கா ஏன் இப்படி ஓடி வரீங்க ?", என்றாள்.
" ஆனா பொறக்கலேன்னா நிம்மதிய தேடி ஓடிகிட்டே இருக்க வேண்டியது தான் டா !",என்றாள் ரமணி .
" ஏன் அக்கா அப்படி?",என்று அப்பாவியாய் அந்த அப்பாவியிடம் கேட்டாள் அந்த சிறுமி .
அதற்குள் அந்த கொடூர கூட்டம் ரமணியை கண்டுகொண்டது .
அந்த வர்க்கம் பிடித்த கண்கள் அந்த சிறுமியையும் தனக்குள் அடைத்து கொண்டது .
" செல்லம் அவங்க கிட்ட நீ மாட்டிக்காத டா ,ஓடு"., என்று பரபரப்புடன்கூறினாள் ரமணி .எதிரே வந்த அந்த கொடூர கூட்டத்தோடு அந்த சிறுமிக்காக சண்டை இடவும் துணிந்தாள்.
அந்த கும்பலில் இருவரின் வக்கிர கைகள் அருகில் இருந்த கல்லை கொண்டு ரமணியின் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்தன .
தன் வக்கிர ஆசையை நிறைவேற்ற அந்த சின்னஞ்சிறு தளிரை வேட்டையாட கொடூர கும்பல் சீறி பாய்ந்தது.

