வார்த்தைகளிடையே வாழ்க்கை...
உச்சரிக்க துடித்த வார்த்தைகள்,
உறக்கத்தில் உளறிய வார்த்தைகள்,
சொல்லக் கூசிய வார்த்தைகள்,
ரகசியமாய் சொன்ன வார்த்தைகள்...
நீ கைவிட்ட வார்த்தைகள்,
என்னிடம் எதிர்ப்பார்த்த வார்த்தைகள்,
மனதில் மந்திரமாய் ஜெபித்த வார்த்தைகள்,
மரணம் வரை சொல்லாத வார்த்தைகள்...
வார்த்தைகளின் இடைவெளி,
வாழ்வின் பெருவெளி....
சொல்ல விரும்பி....
சொல்ல பயந்து...
சொல்லவே முடியாது போனது,
அநேகம்........