ஹைக்கூ

1. எங்கு ஒளித்து வைத்திருந்தாலும்..
உரசியே களவி செல்கிறது ..
பூவின் வாசத்தை..
மென்காற்று !

2. உறவுகளின் இடப்பெயர்ச்சியை
தாங்காது விரிசல் விட்டது
மனங்கள் மட்டுமல்ல..
அவர்கள் வாழ்ந்த வீடும்தான்..

3.காற்றோடு உரசும் பூக்களும் ..
காதலோடு உரசும் கண்களும்...
முற்றுபுள்ளி மறந்த கவிதையே ?!

எழுதியவர் : மீனதொல்கப்பியன் (13-Jan-16, 8:30 pm)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே