மறுநாள் மரண அறிவித்தல்
வயது அறுபதாச்சு
வறுமைகள் பல கடந்தாச்சு..
பெத்த புள்ள ஐந்தாச்சு
பேரன் பேத்தியும் பல பாத்தாச்சு...
வீட்டு முடுக்கோரம் சொந்தமாச்சு
கடைசிப்புள்ள வயசு இருபதாச்சு..
கடைசி மகன் கரை சேரலியே
கற்ற கல்வி கை கொடுக்குமோ தெரியலியே..
வியாதி பார்த்துத்திரியே பாவி மனம் சொல்லலியே
வைத்தியசாலை வந்து பிள்ளைகள் அலையுமோ என்று மனம் கேட்கலியே..
சாவைத்தேடி நகர்ந்தாச்சு
நான்கு நாள் போக படுத்த பாய் பிஞ்சாச்சு..
அன்பைக்கொடுத்து வளர்த்தேன் அன்று
வெறுப்பை சுமந்து வாழ்கிறேன் இன்று..
இறைவனடி செல்ல நாள் கிடைக்காதோ
என் மன வேதனை நிக்காதோ...
.....மறுநாள் மரண அறிவித்தல்......