தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து2---ப்ரியா

(முன்கதை சுருக்கம்:ரியா,வந்தனா கீது மூன்றுபேரும் நெருங்கிய தோழிகள்...தோழி வந்தானாவை காதலித்து ஏமாற்றிய ஒருவனை பழிவாங்கும் நோக்கத்தில் அவனைக்காண கிளம்பியிருக்கிறாள் ரியா)

தன் தோழிக்காக முதன் முதலில் ஒரு தவறு செய்யப்போவதை நினைத்த ரியாவுக்குள் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் தன் உயிர்த்தோழிக்காகதானே என்று மனதை தேற்றிக்கொண்டாள்...!

வந்தனா சொன்னதை பார்க்கும் போது அந்த வசந்த் மிகவும் மோசமானவனாகத்தான் இருப்பான் பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ளவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்...

பேருந்திலிருந்து நடத்துனர் அடுத்த ஸ்டாப் இறங்கி வா என்று குரல் கொடுத்ததும் தான் இறங்கும் ஸ்டாப் வந்துவிட்டதை உணர்ந்த ரியா இறங்கி வந்தாள்.

மெயின் இடத்திலிருப்பதால் எளிதாக வசந்த் கார் கம்பெனியை கண்டுபிடித்துவிட்டாள்......வெளியில் நின்று கொண்டு அந்த நிறுவனத்தை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு தனக்கு இஷ்டதெய்வமாகிய விநாயகரை ஒருமுறை மனதில் நினைத்துவிட்டு உள்ளே சென்றாள்..........

உள்ளே சென்றவள் அப்படியே திகைத்து விட்டாள் அழகான வடிவமைப்பு பெரிய ஹால் போன்ற பகுதியும் பிரிவுகளுக்கேற்ப தனி தனி அறைகளும் மிகவும் அற்புதமாய் அமைக்கப்பட்டிருந்தது.

"அவனது ரசனைகள் எவ்வளவு அழகு"என்று பிரமித்துவிட்டாள்.பணக்காரன் என்ற திமிரும் அவனது ஆடம்பரச்செலவுகளும் இதிலேயே தெரிகிறது....

இன்னும் உள்ளே செல்ல செல்ல நிறைய பணியாளர்கள் அவரவர் பணியில் மும்முரமாய் இருந்தனர் இவளை கண்டும் வேலை நிமிர்த்தமாய் காணாதவர்களை போல் தன்வேலையில் இருந்தனர்....!

வசந்தை எப்படி கண்டுபிடிப்பது என்று சுற்றுமுற்றும் பார்த்தவளை ஒருவன் நெருங்கினான்...,

ஹலோ!என்று கைகொடுத்தான்.

ஹாய்!என்று இவளும் புன்னகைத்துவிட்டு கைகுலுக்கினாள்......

"மிஸ்.ரியா" என்று கேட்டான் அவன்?

எஸ்! என்றதும். உள்ளே வாங்க என்று உள்ளுக்குள் இருக்கும் இன்னொரு அறைக்கு அழைத்து சென்றான்...!

அங்கு முதல் பிரிவில் 3பேர் அமர்ந்து கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஒரு இடம் காலியாய் இருந்தது.....

அவர்களிடம் ரியாவை அறிமுகம் செய்து விட்டு உள்ளே வாங்க என்று அதற்கு உள்ளே இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு யாரும் இல்லை ஒரு பெரிய மேஜையும் அழகிய அலங்கரிப்புடன் இருக்கையும் இருந்தது ஏசி அறை ஜில்லென்று இருந்தது சுற்றி பார்த்தாள் ஒருபுறம் சாமி படங்களும் அதற்கு பக்கத்தில் இரு பெரியவர்களின் படத்திற்கு மாலையும் போட்டு வைக்கப்பட்டிருந்தது,கண்டிப்பாக இது அவனின் அப்பா அம்மாவாகத்தான் இருக்குமென்று யூகித்துக்கொண்டாள்..;

இன்னொருபுறம் காலண்டரும் இன்னும் சில அலங்கார சுவரொட்டிகளும் மாட்டப்பட்டிருந்தது அனைத்தையும் உற்று கவனித்தாள் ரியா...!

அந்த இருக்கைக்கு எதிர்புறம் அதே மாதியான இருக்கையும் சற்று சிறிய மேஜையும் ஒரு கம்பியூட்டர், போண் மற்றும் சில பைல்களும் வைக்கப்பட்டிருந்தது இந்த இருக்கையை காட்டி அமர சொன்னான் அவன்.......

அவள் உட்கார போகும் போது "எஸ் க்யூஸ் மி சார்" என்று அழைத்தாள் ரியா;என்ன மேடம் என்று திரும்பியவனிடம் உங்க பேரு என்ன என்றாள்?

ராம்!என்று சொன்னவன்... இன்று சார் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா சிவகங்கை வரைக்கும் போயிருக்காங்க வந்த பிறகு உங்களுக்கான வேலைகளை சொல்லுவார் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் அவன்....!

ஹேன்ட் பேக்கை கிழே வைத்தவள் வசந்தை இன்று பார்க்க முடியவில்லையே என்று மனதிற்குள் வருந்திக்கொண்டாள்.அந்த அறையை மறுபடியும் ஒருமுறை கண்களால் படம்பிடித்துவிட்டு வெளியே வந்தாள்.

அங்கிருந்த பணியாளர்கள் இவளைப்பார்ப்பதும் ஏதோ சொல்வதுமாக இருந்தனர்....தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர்.எதையும் கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டுக்கொண்டே சென்றாள் ரியா....

வந்தனா அவனை மிகவும் கேவலமாக சொல்லியிருந்தாள், எப்போதும் பெண்களுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பான் அழகான பெண்களை கண்டால் வளைக்காமல் விடமாட்டான் என்று அவனை பற்றி சொன்னதை நினைத்து எரிச்சலுடன் நடந்து சென்றாள் ரியா........

அவனே ஈசியாக உன்னிடம் மடங்கி விடுவான் இருந்தாலும் நீயும் அவனிடம் அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் நாம் நினைத்தது நடக்கும் என்று சில விஷயங்களை அவள் காதில் சொன்னாள் வந்தனா....!

இதுவரைக்கும் கேட்டிராத வார்த்தைகள் என்றாலும் எல்லாம் தோழிக்காகத்தானே அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க போகிறோம் அவ்வளவுதான் என்று ஆறுதல் படுத்திக்கொண்டாள்.....இருந்தாலும் நாம் ஒரு பெண் ஆண்கள் செய்வதுபோல் செய்வது முறையா?இது சரியா?தோழிக்காக நம் வாழ்வில் ஏதேனும் புது பிரச்சனைகள் வருமா?என பலகோள்விகள் மனதிற்குள் எழும்ப...... மொத்தமாய் விடை கிடைத்தது......ம்ம்ஹும் இதெல்லாம் தப்பில்லை தவறு செய்பவர்களை எந்த ரூபத்திலும் போய் தண்டிக்கலாம் தண்டனைக்கொடுக்கலாம்......பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தனக்குத்தானே தான் செய்வது தவறில்லை என்று தேற்றிக்கொண்டாள்.........

யோசித்துக்கொண்டிருந்தவள் காலையில் வந்தனா சொன்ன அந்த விஷயம் நினைவுக்கு வர அவள் சொன்ன அந்தபக்கம் வந்து பார்த்தாள்.... அந்த காட்சியைப்பார்த்ததும் அப்படியே சிலை போல் நின்று விட்டாள்......?????

சிவகங்கைக்கு சென்ற வசந்த் அவனது புது ப்ராஜெக்டுடன் மகிழ்ச்சியாக தனது அறைக்கு வர திடீரென கம்பெனி பற்றி நினைவுக்கு வர ....புது ஸ்டாப் வர சொல்லியிருந்தோமே? வந்திருப்பாங்களா?என்ன ஆயிருக்கும்...? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் தனது கம்பெனிக்கு அழைப்பைக்கொடுத்தான்......


தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (14-Jan-16, 1:07 pm)
பார்வை : 526

சிறந்த கவிதைகள்

மேலே