எனக்காக பிறந்தவளா
சுப்ரபாரத ஒலி காற்றில் கலந்து வசந்த் இன் செவிகளை தட்டி எழுப்பியது
கடுப்புடன் எழுந்த வசந்த் கைபேசியில் நேரத்தை பார்க்கிறான்...
8:05 அவனை வேகபடுதியது .
அரைகுறை குளியளை முடித்து Laptop bag உடன் வெளி ஏறினான் வசந்த்...
"நந்தினி பான்சி" வாசலில் நுழைத்தவுடன் அங்கு இருந்த மைதிலியை கண்டு
இன்ப மழையில் நனைய துவங்கினான்....
மைதிலி :எவ்ளோ ரூபா போடணும் sir ?(இலேசான சிரிப்புடன் )
வசந்த் :Daily எவ்ளோ ரூபாக்கு போடுறேனோ அவ்ளோக்கு (இலேசான சிரிப்புடன் )
மைதிலி : Ok Sir (அதிக சிரிப்புடன் )
வசந்த் 20 ரூபா வை மைதிலி இடம் கொடுத்து விட்டு தூரலில் நனைந்த படி வெளி ஏறுகிறான்...
இது இவன் வாழ்வில் கடந்த இரு வாரங்களாக நடக்கும் சம்பவம். அவன் இடம் "Net Banking" வசதி இருந்தாலும். அவனும் அவன் மொபைலும் மைதிலி TopUp செய்யும் 20 ரூபாவில் தான் Recharge ஆகின்றது...
ஆனால் மைதிலி தான் பனி புரியும் கடைக்கு வரும் பாதிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன்
புன்னகைத்து பேசுவது அவள் இயல்பு ,வசந்தை போல் சில இளைஞர்கள் அதை காதல் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்..
ரவி :என்ன மச்சான் தானா சிரிச்சுட்டு இருக்க?
வசந்த் : தெரியல மச்சான்..!! 2 நாளா சரியா தூக்கம் வரல மச்சி..
ரவி : யாரு மச்சான் மைதிலியா ???
வசந்த் புன்னகைக்க தூறல் மறுபடியும் அவனை நனைத்து விட்டது....
வசந்த் :ஆமா டா அவ சிரிக்குற சிரிப்ப பார்த்தா லட்சம் வைரம் ஜொலிக்குர மாதரி இருக்கும்,
அவ கண் என்ன பார்த்தா என் உயிரே போற மாதரி வலிக்கும்டா.
அவள அப்படியே பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கும்
அவ்ளோ Impress பண்ணிட்டா டா...
ரவி : டேய் டேய் போதும் டா , அவளும் உன்ன love பண்ணினா
ஆசைய வளர்த்துக்கோ இல்லன்னா வீனா ஆசைய வளர்துகாத புரியுதா???
வசந்த் : வீனா ஆசைய வளர்ரக்கல்ல டா ,
Love full aa பரவி Fridge ல வெச்ச மாதரி ஜில்லுன்னு இருக்கேன் .
ரவி : காதல் முத்திரிச்சோ ???
வசந்த் : ஹ்ம்ம்ம்ம்
ரவி : அப்போ Evening 6 மணிக்கு EC பண்ண போவ இல்ல.
வசந்த் : ஹ்ம்ம்ம்ம்ம் ..
ரவி : சரி Phone a கொடு ஒரு Call பணிக்குறேன்.
வசந்த் : ரவியை முறைத்து கொண்டு போனை கொடுக்கிறான்.
ரவி : கொடு மச்சி எப்டியும் Balance a காலி பண்ணினா தானே....
நீ பண்ணுற EC காலி ஆகும் .
வசந்த் : பண்ணி தொல
மாலை 6.00 மணி
வசந்த் "நந்தினி பான்சி"க்கு போகிறான் அங்கு குமார் அண்ணன் இருக்கிறார
குமார் அண்ணன் : சொல்லு பா,,,
வசந்த் : EC பண்ணனும் அண்ணா,,,,
குமார் : எவ்ளோ க்கு பா ???
வசந்த் : 20 ரூபா (சோகத்துடன்)
குமார் : Number சொல்லு பா.
வசந்த் :அண்ணா இங்க ஒரு பொண்ணு இருக்கும் ல ,
எங்க அண்ணா அந்த பொண்ணு ???
குமார் : அது இன்னைக்கு 4 மணிக்கே போய்டுச்சு ப்பா..
நாடு கெட்டு போய் இருக்கு Daily Evening ஆனா
அந்த பொண்ணு கடைல இருந்துட்டு எவன் எவ கிட்டயோ பேசுது,...
கடைக்கு வார எல்லா பசங்களையும் பார்த்து சிரிக்குது...
ஹ்ம்ம்ம்ம்ம்... உனக்கு தெரிஞ்ச பொண்ணு யாரும் இருந்தா சொல்லுபா கடைக்கு ..
வசந்த் பதில் சொலவில்லை காசை கொடுத்து விட்டு எந்த வித சிந்தனையும் இல்லாமல் வெளியே வந்து விடுகிறான்.
அவன் மனதில் முழுக்க முழுக்க கவலை மட்டும் தான்...
மைதிலியின் சிரித்த முகம் கூட அவனை புன்னகை செய்ய தூண்டவில்லை....
(தொடரும்..........)