தைபொங்கல் முதல் நாள் போகி சுபநாள்

இன்று தமிழர்த் திருநாள்

தைப் பொங்கல் முதல் நாள்

போகி நன்னாள் சுபநாள்

இன்று நம் தமிழ் பெருமக்கள்

பழையன கழித்து புதியன,

ஆம் நன்மைப் பயக்கும் புதியனவெல்லாம்

புகுத்தி பெரு மகிழ்ச்சி கொள்வர்


கிராமத்தில் வேளாண் பெருமக்கள்

இன்று பழைய வண்டி சக்கரம் மற்றும்

பழுதடைந்த ஏர்முனை ஏனைய

பழையன எல்லாம் சேர்த்து

வீட்டோர் அனைவர் முன்னே

முற்றத்திலே தீ இட்டு கொளுத்திடுவர்

அந்த தீயின் முன்னே , இல்லை

அந்த அக்னி தேவன் முன்னே

சபதம் ஒன்று சேர்ந்தே எடுப்பர்

அதுதான் இனி" தீயவை எம்மை

நாடா வண்ணம் எல்லார்க்கும் எப்போதும்

என்றும் நன்மையே செய்வோம் அதுவன்றி

தீமையை நாடோம் செய்யோம் ",பின்னர்

கொழுந்திட்டு வளரும் தீயை மும்முறை

வலம் வந்து போகி பிரார்த்தனை முடிப்பார்

பின்னே மதியம் அனைவருக்கும் உணவளித்து

தாமும் உண்டு இனிதே போகியாம் பொங்கல்

திருநாள் முதல் நாளை கொண்டாடிடுவர் .

எழுதியவர் : வசவன்-தமிழ்பித்தன்-வாசுத (14-Jan-16, 2:37 pm)
பார்வை : 167

மேலே