தந்தையின் சிறப்பு
பெத்தவளின் ........
பெருமை சொல்ல
எத்தனையோ ?வரிகளுண்டு
பெதவனின் பெருமை சொல்ல !
ஒத்தவரி சொல்லலையே !
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
எத்தனையோ ?கவிதைகளை
எழுதிருக்கேன் ......
எப்பனுக்கு கவி எழுத
எப்பவும் ...நான்
நெனச்சதில்ல
உயிர் பிண்டமாய்
உலகுக்கு தந்தவனே !
உன் பெருமை சொல்லி எழுத
உள்மனசு நெனக்கலையே
தாயின் பெருமைகளை
தரணிக்கு சொல்லிவிட்டு
தகப்பனின் பெருமை சொல்ல
தயங்குவது தப்புதானே ...
உன்னோடு .........
பெருமைதனை
உலகுக்கு சொல்லிடவே ?
பெரும்பொழுது போதாதப்பா
நடை வண்டி பிடித்து
அம்மா நடைபயில
வைத்தாலும்
அப்பாவின் ஆள்காட்டி
விரல் பிடித்து .......
அங்குமிங்கும் நடந்தால்தான்
ஆனந்தம் பொங்கிவரும்
தாயின் மடியில்
தாலாட்டு கேட்டாலும்
தகப்பனின் தோளில்
சாய்ந்தால்தான்
கண்ணுறக்கம் வந்துவிடும்
உன் தோளுமேல
தூக்கிவச்சி ....எனக்கு
ஊருஉலகம் காட்டினாயே
கால்கடுக்க ....எனை தூக்கி
காததூரம் ஓடுவாயே
உன்னோடு ..
.உழைப்புலதான் உடம்புல
உதிரமும் ஓடுதப்பா
கண்ணோடு ...அந்தகாட்சி எல்லாம்
கண்ணீரால் கரையுதப்பா
மகன...நீ வளர்க்க
மாடா ஒழச்ச
மா தவம் தெரியலப்பா
இப்போ ...தகப்பனா
நானிருந்து ...நான் படும்
கழ்டத்தில் ...அந்த
வேதனை புரியுதப்பா
தன மகன் வாழ்க்க
தலைநிமிர வேணுமின்னு
முதுகெலும்பு வளைய
மூட்ட தூக்கி சுமந்தாயே
கதிரருவா...நீ எடுத்து
காத்திருக்கும் வேலையில
கையறுத்து கொண்டாயே
கொட்டுன குருதியில
வேட்டிய கிழிச்சு ......
வேதனைக்கு கட்டு போட்ட
மூடு பனியில ......
முக்காட போட்டுக்கிட்டு
ஆளுக பின்னால
அறுப்பறுக்க போனாயே ?
தொடரும்
?