தலை மகளே

தமிழர் மட்டும் அல்ல தரணி எலாம்
தாலாட்டும் திருநாள் தை திருநாள்
தைப் பொங்கல் என்றாலே
இனித்திடும் இன்பம் மனதிலே
ஊறிடும்சுவை நாவிலே
புத்தம் புது நெல் குற்றி புது அரிசி எடுத்து
புதிர் எனும் பொங்கல் சமைத்து
தலைவாழை இலை எடுத்து புதிர் படைத்து
அப்பாவின் கையாலே ஆசையுடன் பரிமாறும்
அன்பு மனம் இன்ப மணம் நினைத்தாலே இனிக்குதையா
அம்மாவும் நாங்களும்
வட்டமாக உட்கார்ந்து பால் மணக்க பழம் மணக்க
புத்தரிசி பொங்கல் உண்ண அப்பாவின் மனம் நிறைந்து
தைப் பொங்கல் வாழ்த்தினை மாறி மாறி சொல்லிடுவோம்
விவசாயி எங்கப்பா என்று சொல்லும் பெருமையும்
அன்று தான் நிறைந்து வரும் மனம் எல்லாம்
விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ வழி ஏது/
புரிகிறது எங்களுக்கு
மனிதர்களில் திறமை உள்ளவன்விவசாயியே
தைப் பொங்கல் கொண்டாடும் இல்லம் எல்லாம்
செழித்து நடை பயின்றிடுமே செல்வம் எல்லாம்
சீரோடும் செழிப்போடும் வாழ்வதற்கு
தங்கு தடை ஏதும் இல்லை தரணியிலே
விவசாயம் படைத்திட விரைந்திடுவோம்
விளை நிலங்கள் உருவாக்க முனைந்திடுவோம்
பொங்கலோ பொங்கல் என்று வரவேற்போம் தை மகளை
தைத் திருநாள் எல்லோர்க்கும் தன்னிறைவு தந்திடும் நாள்
வாழ்க எம் தைமகளே, தை மாதம் பெற்றெடுத்த தலை மகளே

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jan-16, 11:24 pm)
Tanglish : thalai magale
பார்வை : 68

மேலே