பயபுள்ளைக்கு புத்திசாலிதனத்த பாரு
ஒருவன் ஒரு மகானிடம் சென்று, "ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?" என்று கேட்டான். "தாராளாமாக சாப்பிடலாம்" என்றார் மகான். "தண்ணீர் குடிக்கலாமா?" என்று கேட்டான் அவன். "குடிக்கலாம்" என்றார் மகான்.
"சிறிது புளிப்புப் பொருள்..." என்று இழுத்தான் அவன். "தவறேதும் இல்லை...சாப்பிடலாம்" என்றார் மகான். "இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்... இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகி றது... அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?" என்றான் அவன்.
உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார்,
"நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போட்டால்...." "சிறிதும் கவலைப்பட மாட்டேன்?" என்றான் அவன். "சிறிது நீரைத் தெளித்தால்.....?" என்று மீண்டும் கேட்டார் அவர். "அப்பொழுதும் கவலைப்பட மாட்டேன்" என்றான் அவன்.
"அப்படியானால், நான் அந்த மண்ணையும், நீரையும் ஒன்றாகச் சேர்த்து, இரண்டையும் தீயில் சுட்டு உருவாக்கப்பட்ட செங்கல்லினால் உன் தலையில் அடித்தால்...??
பயபுள்ளைக்கு புத்திசாலிதனத்த பாரு...............