ஐம்பதிலும்
வேற்றுமை அறியாத
உள்ளம் பிள்ளை உள்ளம்
உயர்வு,தாழ்வு
ஏழை,பணக்காரன்
முட்டாள்,அறிவாளி
எதுவும் தெரியாத
எளிய மனம்
வியப்பில் எதையும் புரியவும்
விரும்பிக் கேட்டுத் தெளியவும்
விரும்பும் உள்ளம்
பிள்ளை உள்ளம்
ஐந்தில் வளையும் இவர்கள்
ஐம்பதிலும் பணிந்தே (வளைந்தே ) வாழ்வார்கள்
சிறு வயதில்
சிந்தனைகள் வளர்க்கும் எவரும்
பெரியவரான பின்னும்
அறியவே விரும்புவர்
ஆணவமின்றியே வாழ்வர்!