எழுதிய நான்

சட்டெனத் தொடங்கும்
படபடப்பில்
பின் நவீனக் கவனங்கள்...

தப்பிப் பிழைத்த
வீரச்சுவடுகளில் நீந்திச்
சரியும் நித்திரை பிறைகள்...

ஊமைப் பாதங்கள் பதிந்தே
கிடக்க, கொலுசொலி
அசரீரியாகும்....

மாதக் கனவுகள்
பெய்த பின் சாகும்
அதிர்வுகள் குறைகிறது....

தேகப் பிழைகள்
தீர்வது யாதெனில்
தித்திக்கும் கனவுகளோடு...

மந்திரப் புன்னகை
மாத்தி யோசிக்கையில்
மற்றவை மந்திரம்...

ஊர் தேடும் உலகை
பூட்டிக் கொண்ட பின்
கதவும் வட்டம்...

பின் ஒரு நாளில்
ஆகி விடும் முன்
சொன்ன நாள்...

தலை பியித்து எறிந்து
விட்டு வேகமாய் நடக்கையில்
தப்பித்தது இனி
எழுத வேண்டியவைகள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Jan-16, 2:57 pm)
Tanglish : eluthiya naan
பார்வை : 125

மேலே