புரியாத வாழ்க்கை

வாழ்க்கை என்றும் புரியாது
புரிந்தால் வாழ இயலாது!
சமுதாயம் என்பதே சம்பிரதாய சமாதானங்கள்
சகலமும் சங்கமிக்கும்
சம்பவ சந்தை!
அற நெறி எல்லாம் அடுத்தவர்க்கே
அனுகூலத் தவறும் அக ஆனந்தமே!
அஞ்சி வாழாமல்
அண்டிப் பிழைக்காமல்
அரிது வாழ்க்கை
நாம் அறிந்த வாழ்க்கை!