அறிவியல் தமிழ் ஞானி அப்துல் கலாம்
அறிவியல் தமிழ் ஞானி
அப்துல் கலாம்
இந்தியாவின் விலை மதிப்பில்லா
தமிழ்த்தாய் சொத்தே
இராமேஸ்வரம் ஆழ்கடல் ஆனிப்பொன் முத்தே
உன் பிறப்போ ஏழ்மை! உள்ளமோ எளிமை!
கடந்தாய் தாழ்மை! அடைந்தாய் மேன்மை!
ஆற்றல் மிகு இந்திய முதல் குடி மகனே
பாரத ரத்னா பத்மவிபூசன் கண்ட திருமகனே
விருதுகள் பட்டங்களால் மமதை இல்லை உனக்கு
திருநாட்டை வல்லரசாக்கும் கனவு ஈந்தாய் எமக்கு
கனவு காண இளவல்களுக்கு அறை கூவல் விடுத்த ஞானியே
அணுவை பிளந்து ஆராய்ச்சி வெற்றி கண்ட விஞ்ஞானியே
உலகம் போற்றும் மெய்ஞானியே,
பொன்மொழிகளின் தமிழ் ஞானியே!
எழுச்சி தீபங்களாவோம் உன் கனவுகளை
மெய்யாக்கியே!
பிறப்பு சம்பவமானாலும் இறப்பை சரித்திரமாக்கிய பெருமானே
கழுகாய் பறந்து இலட்சிய ஏவுகணைவிட்ட விண்வெளி நாயகனே
பரந்து விரிந்த பார்வை உன் உயர் எண்ணங்கள்
மலை முகட்டின் உச்சி தொட்டவை உன் ஏக்கங்கள்
தமிழார்வம் கொண்டு தமிழன்னைக்கு
அணிசெய்தாய்
அக்னி சிறகடித்து இந்தியா 2020 க்கு வழி செய்தாய்
வெல்வேன் சாதிப்பேன் சோதனைகளை
முறியடிப்பேன் என்றீரே கலாம்!
அறிவுக்கும் ஆய்வுக்கும் சரி நிகர் நீயே
உனக்கு என் சலாம்!
ஜான்ஸி