வேம்பு அது கசந்தாலும் அதன் நிழலும் கசந்திடுமோ --- சக்கரைவாசன்
வேம்பு அது கசந்தாலும் அதன் நிழலும் கசந்திடுமோ
********************************************************************************************
காம்பைக் கடித்தாலும் கசப்பாய்க் கசக்கிறது
வேம்பின் தளிர் முதலாய் வேர்வரையில் உள்ளதெலாம்
வேம்புக் கசப்பஞ்சி வெய்யிலுக்கு அதன் நிழலில்
நாம் புகுந்து நிற்பதனால் நாக்கசந்து நின்றிடுமோ !