என் காதலியாக ----------நீ கவிதை,
என் காதலியாக. ...
நீ கவிதை !
- - - - - - - - - - - - - - - -
என் கற்பனையின்
ஆழம் நீ
என் கவியிதழ்களின்
வாசம் நீ
என் காதலின்
கனிரசம் நீ
என் வாழ்வின்
வரப்பிரசாதம் நீ
என் எழுத்தின்
துளி மை நீ
என் எழுதுகோலின்
கருவறை நீ
என் நம்பிக்கையின்
அடிப்படை நீ
என் தோல்விகளின்
இலக்கணம் நீ
என் மூளை நாணின்
உணர்ச்சிப்பெருக்கு நீ
என் மூச்சுக்காற்றின்
உட்சுவாசம் நீ
என் மரண வீட்டின்
மலர்கள் நீ
என் காதல் ஊர்வலத்தின்
பிணப்பெட்டி நீ
என் எரிதலில்
தீபம் நீ
என் அணைத்தலில்
கரும்புகையாய் நீ
என் பழைய கவிதையில்
புதுவை நீ
என் மீள் பரிசீலனையில்
மீட்டும் ராகம் நீ
என் குரலோசையில்
நாண்கள் நீ
என் நதி ஓட்டத்தில்
நீர் கடந்த நிலம் நீ
என் பட்டங்களில்
வித்தைகள் நீ
என் வெற்றிகளில்
வாசற்படி நீ
என் தீட்டிய கல்லில்
வைரம் நீ
என் இலட்சியங்களில்
வைராக்கியம் நீ
என் பாரதிக்கண்ணம்மாவில்
பல்லக்கு நீ
என் கம்பராமாயணத்தில்
வம்பு வழக்கு நீ
என் எழுதாமறையின்
ஈரடி நீ
என் கவிக்கோ புரத்தில்
முதல் தரிசனம் நீ
என் கணப் பிரசவிப்பில்
குழந்தை நீ
என் கட்டி அணைத்தலில்
அன்னை நீ
நீயோ என்னை
கவி என்கிறாய்
நான் அதை
எழுத்துப்பிழை
என்கிறேன். .....!!!
- பிரியத்தமிழ் -