கவிதை

மொழியின் திரியில்
மிளிர்ந்திடும் தீபம்...
சுழியும் சதமாகும்
சுந்தர சாபம்...
விழியின் விழைவில்
விரலின் பொழிவு...

இதயமும் இயற்கையும்
இணைந்திடும் கலவி...
உதயமும் சயனமும்
உலவிடும் விரவி...

சரித்திர இசை
ஒலித்திடும் சுரம்...
தரித்திர இயலாமை
கருக்கிடும் வரம்...
உதிர்ந்த பின்னும்
உறையமறுக்கும் உதிரம்...

துள்ளிய உவகை
துளிர்த்திடும் அழுகை
மெல்லிய காதல்
மேன்மையின் ஓதல்
கிள்ளிய நிகழ்வு
கிளர்ந்தெழும் உணர்வு
சொல்லிடும் பதிவு
சொர்க்கத்தின் நுழைவு...

எழுதியவர் : அஞ்சா அரிமா (20-Jan-16, 8:49 pm)
Tanglish : kavithai
பார்வை : 645

மேலே