வலிகள் ஓடும் ஊஞ்சல்

ஆராரோ ஆரிவரோ
ஆராய்ச்சி செய்வாரோ
கூறாரோ குலமகனே
கொழுகொம்பே கண்ணுறங்கு

மயிலே மன்மதனே
மாம்பழமே தேன்குழலே
குயிலே குலக்கொழுந்தே
குறையேது கண்ணுறங்கு

வண்ண மலரே வான் மதியே
எண்ண தளிரே கண் குளிர்வாய்
கன்னம் சிவந்து முத்தமிடுவேன்
கண்மணியே நீ கண் வளர்வாய்

ஆராரோ ஆரிவரோ
ஆராய்ச்சி செய்வாரோ
கூறாரோ குலமகனே
கொழுகொம்பே கண்ணுறங்கு. ...

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Jan-16, 12:55 am)
பார்வை : 175

மேலே