பிஞ்சிதயம்

- - - - - - - - - - -

நான்
இங்கு தொலைவில்
இருட்டில்
நீந்துகிறேன் .....!
என் நிலவு
தனிமையில் குளிக்கிறது. ......!

பென்னம் பெரிய
தனிமை
அவளை
பெரியவளாக்கும்
நிறைய
மனக் காயங்களுக்கு
பிறகு. ....!

என்றோ
ஒரு நாள்
ஈன்ற
என் கருப்பை
பெருமையுறும். ...!

அந்த
இனிமையில்
நான்
திளைப்பேன்....!

இன்று
அவள் பக்குவப்பட்ட
ஒளிச்சித்திரம்
பண்பலையின்
பரவசப் பாத்திரம்
விண் பூத்த
வெண்ணிலவு. ...!

இளமையின்
ஏக்கங்கள்
எதிர்காலத்தின்
நம்பிக்கை
துளிர்கள்......!

நாளைய
தீர்ப்புக்கள்
என் நிலவின்
நம்பிக்கை
விளக்குகள். ....!

அவள்
அணையாது
பிரகாசிக்கும்
அகல். .....!

அந்த
பிஞ்சிதயம்
அப்பழுக்கற்ற
ஆனந்த
முகையிதழ். .....!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Jan-16, 12:41 am)
பார்வை : 108

மேலே