மணற்கோட்டை
மணற்கோட்டை
- - - - - - - - - - - - - - -
குழந்தைகளின்
எண்ணங்கள்
தகர்த்தெறியப் படும் போதும்
நட்புக்களின்
நட்புரிமைகள்
தாக்கப் படும் போதும்
அர்த்தப் படும்
வாழ்வின் அனுமதி
மறுக்கப் படும் போதும்
கல்வியின் எல்லை
கடத்தலில் கால்
தடக்கி வீழும் போதும்
மன்னிப்பற்ற
குற்றங்கள் தண்டனைகளால்
களையப் படும் போதும்
காதலில் நம்பிக்கை
உசிதங்கள்
கலைக்கப் படும் போதும்
வாழ்க்கையில்
வெற்றி எதிர்பார்ப்புக்கள்
வழுக்கி வீழும் போதும்
நீதிகள் அழித்து
நியாயங்கள்
தண்டிக்கப் படும் போதும்
கட்டிய மனக் கோட்டைகள்
வெறும்
மணற் கோட்டைகளாகவே
உடைத்தெறியப் படுகின்றன. ....!
- பிரியத்தமிழ் -