நீயும் அந்த நானும்

- - - - - - - - - - - - - - - - - -

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என வாயார வசை
புகழ்கிறேன்...

கண்டதும் சுடச்சுட
கட்டி அணைக்கிறேன்
கைகளையும் குலுக்குகிறேன்

உள்ளாரப் புகைந்து
உளம் முழுவதும்
பொருமுகிறேன்

உதட்டோர
மென் சொல்லால்
ஒற்றை வரி சொல்கிறேன்

என்னில் ஒரு படி
மேலே ஏறியதோ
எனக்கென்ன இது கீழோ
இறுமாந்து நிற்கிறேன்

தலைக்கனத்தை
மறைக்க
தடுமாறி எனக்கே
எச்சரிக்கை தொனிக்கிறேன்

வெட்ட வெளிச்சமாய்
ஒரு குழி வெட்டி
வீழ்த்தி விட வேண்டும் என
சாபமும் இடுகிறேன்

ஆனாலும்
வெளிப்படையாக
வெற்றி பெற
வேண்டும் என
வாயார வாழ்த்துகிறேன்

முன்னேறி மூன்று இலை
வரமுன்னர்
முளையிலேயே கிள்ளி
எறிய வேண்டும் என்று
முணுமுணுத்துக்
கொள்கிறேன்

உறிஞ்சிக் குடித்து
களன்று விழும் மலையட்டை போல
அமுதுண்டு
இறுமாந்து களர்கிறேன்
ஆனாலும்
வாயார வாழ்த்துகிறேன்

எப்பிறப்பிலும்
தாழ் பிறப்பு இப்பிறப்பு
மானிடனில் தப்பிப் பிறக்க
தவமேதும் உண்டோ சொல் !

- தமிழ் உதயா-

எழுதியவர் : தமிழ் உதயா (21-Jan-16, 8:03 pm)
Tanglish : neeyum antha naanum
பார்வை : 81

மேலே