பயணம் - ஆனந்தி

மேலே நீல வானம்
வழிகளின் இருபுறமும் அடர்
மரங்களுக்கு மத்தியில்
பூத்து குலுங்குதல் என் கடமை
என்பது போல பூக்கள் பல் வரிசை
காட்டி நிற்க,
தேவலோகத்தின் தேராய்
மிதக்கிறது
தார்சாலையில் இப்பேருந்தும்.
குளுகுளுவென வீசும் தென்றல்
ஒரு புறம்,
லேசான கன்னம் அறையும் தூறல்
மறுபுறமென இக்கணத்தை
பகிர்ந்துகிடக்க
பேருந்து நிறுத்த,
மல்லிகை பூ வாசம்
என்னுள் இளமையாய் ஏதோ
செய்துவிட்டு போக,
இளையராசாவின் இசையோடு,
ஒட்டுனரின் பேருந்து ஹாரனும்
ஒரு இசைக்கருவியாய்
என்னுள் சுருதி சேர்த்து,
எல்லா நிகழ்வுகளும் ஒரு சேர ஓர் புள்ளியில்
சிலிர்ப்பின் எல்லைக்குள் தள்ளி விட,
மகிழ்ச்சி கோட்டின் எல்லைக்குள்
நானும் மறுத்தளிக்காமல்
பறவையிடம் சிறகுகள்
கேட்கிறேன் பறந்திட
வேண்டி கடனாய்.
இனி இப்பயணமும் நியாபகங்களாக்கப்படும்
என் நினைவலைகளில்................

எழுதியவர் : ஆனந்தி.ரா (21-Jan-16, 2:43 pm)
பார்வை : 156

மேலே