பாட்டி வைத்தியம் - 5
* மாம்பிஞ்சுகளை வெயிலில் காயவைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
* கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கப் பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
* கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
* பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். உடைந்த எலும்புகள் இணைந்து எலும்புகள் பலம் பெறும்.
* பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும்.
* மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை கப் எருமைத் தயிரில் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
* சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
* மலை வேம்பு இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் தாக்கம் குறையும்.
* இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்