மழலைகள்
மழலைகள்
* * * * * * * *
இது
ஒரு நடக்கும்
பொம்மை !
ஒரு
சுவையான
கவிதை !
ஒரு
படித்து முடியாத
நாவல் !
எல்லோருக்கும்
பிடிக்கும்
பூங்காற்று !
ஆசைகளால்
மூழ்கிய
தென்றல் !
எல்லோரையும்
கவரும்
பூங்கொத்து !
வீட்டை
விடியலாக்கும்
விடி வெள்ளி !
ஒரு பேதம்
தெரியாத
பழரசம் !
உண்மை
சிரிப்புக்கு
உதாரணம் !
ஆனந்த
இருப்பின்
அகல் !
உண்மைக்கு
இதுவே
உண்மை !
அழத்தெரிந்த
போலியற்ற
புன்னகை !
யாரையும்
விழுத்தாத
அம்பு !
கருணை
உணர்வில்
பச்சைப்பசேல் !
கடந்த
அன்பில்
முழு நிலவு !
பிடிவாதம்
பெற்றுக் கொள்வதில்
தெளிவு !
வீடுகளில்
வாசனை கமழும்
சந்தனச்சாந்து !
கொவ்விதழ்
குலுங்கி நிறைக்கும்
குங்குமச் சிமிழ் !
வாழ்க்கை
இனிக்க கிடைத்த
வரப்பிரசாதம் !
- தமிழ் உதயா-