வேற்று கிரகம்
வேற்றுலகவாசிகள் புரிந்துகொள்ளும் வகையில் செய்தி தயாரிப்பது எளிய வேலையல்ல
விஞ்ஞானிகள் வேற்றுலகவாசிகளிடமிருந்து குறிப் பிடத்தக்க வகையிலான சிக்னல்கள் வருகின்றனவா என ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பயன்படுத்தி வானை அலசிவருகிறார்கள். அதாவது, வெளியிலிருந்து செய்தி வருகிறதா என்று மட்டுமே தேடுகிறார்கள்.
வலுவான காரணங்கள்
இதற்கு மாறாக “பூமி என்ற கிரகத்திலிருந்து பேசுகிறோம்” என்று தெரிவித்து அண்டவெளியை நோக்கி நாம் செய்தி அனுப்பலாம். அப்படி அனுப்பினால் வேற்றுலகவாசிகள் அதைக் கேட்டுவிட்டு நமக்குப் பதில் அனுப்பலாம். ஆனால், அவ்விதம் பூமியிலிருந்து செய்தி அனுப்புவது உசிதம்தானா என்ற கேள்வி எழுகிறது. இவ்விதம் அனுப்பக் கூடாது என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாமாக வலியப் போய் செய்தி அனுப்பக் கூடாது என்பதற்கு அவர்கள் வலுவான காரணங்களைக் கூறுகிறார்கள்.