HALF GIRLFRIEND நாவல் - ஒரு பார்வை

Don't quit..it will happen one day...

இப்படித்தான் இந்த நாவல் முடிகிறது...இது தான் இந்த நாவல் பற்றி எழுதத் தூண்டியது...கடைசி 100 பக்கத்தை ஒரே சிட்டிங் -இல் படித்து முடித்தேன்...அத்தனை விறுவிறுப்பு.... இயல்பு.... சுலபமாக படித்து புரிந்து கொள்கிற ஆங்கிலம்.... எப்பவும் போல ஒரு காதல் கதை.. ஒரு நட்பில் தொடங்கும்.. காதல்... ஆண்களுக்கே உண்டான நகருதல்.. பெண்களுக்கே உண்டான... நகருதல்...என்று இரு துருவங்கள் இணையும் புள்ளியில்... அங்கே... மத்திய தர வர்க்கமும்.. உயர் தர வர்க்கமும்... இணைந்து நகர வேண்டிய நிலை... ஒரு கட்டத்தில் பிரிவு... பின் தேடல்..பின், அமெரிக்கா.... பின் சேருதல்.... அவ்வளவே... ஆனால் "சேத்தன் பகத்" நிகழ்த்தி இருக்கும்... மாயாஜாலம்... வார்த்தைகளிலா...... வாக்கிய அமைப்பிலா.. பத்தி பிரித்ததிலா...... உள்ளே இலையோடும் நகைச்சுவையிலா.. காதலைக் கொண்டாடும் தருணத்திலா... முத்தத்தை விவரிக்கும் உருவத்திலா... அழகிக்கு வந்த வியாதியிலா..... பின் அது பொய் என்ற போது கொண்ட.. கோபம் கலந்த.... அமைதியிலா...எதையும் விட்டு விடக் கூடாது.. முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை போகிற போக்கில் விதைத்து விட்டு போவதில்...HALF GIRLFRIEND FULL FILL செய்கிறது....

பீகாரில் உள்ள டம்ரான் என்ற கிராமத்துக்காரனான... ஆங்கிலம் தெரியாதவனான... மாதவ்... பாஸ்கட் பால் விளையாட்டில் கில்லி... அதன் கோட்டாவில்..டெல்லியில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கல்லூரியில்.. சீட் கிடைத்து டிக்ரீ படிக்க போகிறான்..... அங்கு அவன் காணும் முதல் காட்சியே.. உயரமான ஒரு அழகி பாஸ்கெட் பால் விளையாடிக் கொண்டிருப்பதைத்தான்..... கண்டதும்....பிடித்துப் போகிறது.... அது காதல் என்று அடுத்தடுத்த பக்கங்களில் மெல்ல விரிகிறது...ஒரு பின்தங்கிய மாணவனின்.. தாழ்வு மனப்பான்மையை.. மாதவ் கதா பாத்திரம் நன்கு வெளிப்படுத்துகிறது..... அது மிகை அல்ல...அது அப்படித்தான்.. ஆங்கிலத்தின் முக்கியத்துவம் என்ன என்பது நாம் இன்று அறிந்த ஒன்று தான்... ஆங்கிலம் இல்லையேல் அகிலம் இல்லை என்பது புது மொழி.. அது உலக மொழி ஆன பின்... இன்னமும்.. அரசாங்கம் வேண்டுமானால் அதை அரசியலுக்குள் வைத்து விளையாட்டுக் காட்டுக் கொண்டிருக்கலாம்... தமிழ் வழி படிப்பவர்கள் கொஞ்சம் விழித்துக் கொள்ள வேண்டும்..... ஆங்கிலம் தெரியாமல்...... மனதளவில் துவண்டு விடும் நிலைமை இன்னமும்.. நம் மக்களிடம் இருப்பதை நாமும் உணர்ந்தே இருக்கிறோம்...

அவனுக்கு சீட்டும் கிடைக்கிறது.....அந்த அழகி... ரியாவுடன்... நட்பும் கிடைகிறது.... அவளின் உயர் தட்டு வாழ்க்கை அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தினாலும்...அவளோடு நெருக்கமாகத்தான் அவனின் மனது விரும்புகிறது... அவளும்... நெருங்குகிறாள்.. எல்லாவற்றுக்கும் ஒரு வட்டம்.. வைத்தே வாழ்கையை வாழ்ந்து பழகியவள்..... ஒருமுறைக்கு மேல் இருமுறை ஒரே கேள்வி திரும்பக் கேட்டால் கூட..... 'வாட் யா......?" என்று கோபப் படுபவள்...... அவள்....சுதந்திரமானவள்......"அப்டி பார்த்தா எல்லாம்.." காதல் வந்து விடாத பெண்... ஒன்றாக, கூட அவனோடு தூங்கும்.. மிக மிக இயல்பானவள்...நட்பானவள்.... நுட்பமானவள்....எண்ணங்களின் வழியாக வாழ்வை எதிர் கொள்பவள்... கற்பனைகளின் வசம்.. அவள் சிக்கி கொள்ள விரும்பாதவள்.. அவள் தேடும் உலகத்தில்.. அவள் ஒரு பார் பாடகியாக வேண்டும் என்பதுதான் மிகச் சிறந்த கனவாக இருக்கிறது அவளுக்கு......

டம்ரானின்..... ராஜ குடும்பத்தின் கடைசி ராஜ்குமார் அவன்.. அவன்.. படிக்க வேண்டும்..... அறிவை சம்பாரிக்க வேண்டும்.....ஊரில் தன் தாய் நடத்திக் கொண்டிருக்கும் பள்ளியைத் தன் மூளையைக் கொட்டி வளர்த்தெடுக்க வேண்டும்.... அவனை நம்பி 700 குழந்தைகள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும்.... முக்கியமாக அவன் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை.. அதை சரிப் படுத்த வேண்டும்... இந்த சூழ்நிலையில்.......அவன் காதலில் கசிந்துருகி...அவளைக் கொண்டாடுகிறான்... ஆனாலும் அவன் தன் படிப்பை இயல்பாகவே எதிர் கொள்கிறான்... அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்று பரிட்சை எழுதாமல் இருப்பதில்லை.....எல்லாம் நடக்கையில்.... அவளுடனான காதலையும் அதிகமாகவே வளர்த்துக் கொள்கிறான்...தொடரும் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவளை முத்தமிட்டு விடுகிறான்...... அவளும்.. அதைக் கண்டு கொள்ளாமல்.. ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறாள்.... முத்தம் அன்பின் வெளிப்பாடு என்பதை அவள் புரிந்தவளாகவே இருக்கிறாள்.. அவனோ.. முத்தமே.. காதலின் முதல் திரை என்பதை புரியச் செய்ய முயற்சிக்கிறான்...இருவரின் உகலமும் நம் கண் முன்னே விரிகையில்...அது... வர்க்கப் பிரிவுகளை காட்டிக் கொடுக்கின்றன.... ஒரு பக்கம் கூவக் கரையோரக் குடிசையும்... மறுபக்கம்... அண்ணாந்து பார்க்கிற மாளிகையும்... என்ன மாதிரி டிசைன் என்றே புலப்படாத போராட்டம் நிறைந்த வளைவுகள்...கொண்ட வாழ்க்கையில்...பாசத்துக்கு ஏங்கும் பணக்காரி ரியாவும்... படிப்புக்கும்.... இன்னும் பிற.. வாழ்க்கையின் தேவைக்கும் ஏங்கும்.. மாதவ் ஜா வும்...ஒருத்தி நட்புக்குள் இருப்பதும்....ஒருவன் காதலுக்குள் இருப்பதும்.... பக்கத்தின் வரிகளில்.. நம்மை இந்தியப்பொருளாதாரம் வரை சிந்திக்கத் தூண்டுகிறது...

மீண்டும் மீண்டும் அவன் தன் காதலை தொடுதலின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கையில்...ஒருமுறை எப்பவும் போல..... நண்பனின்.... யோசனைப்படி.... கட்டிலில் அவளை அணைத்து விட.....அவள் திட்டி விட்டு எழுந்து விடுகிறாள்....."தப்பு.... மாதவ்.." என்று அறிவுரை கூறுகிறாள்.....வழக்கமான பசங்களின் கோபம் போல பீப் போட்டு பேசி விடுகிறான் மாதவ்.. ஆணின் வேகம்.....அப்படித்தானே.....காலம் காலமாக நாம் கண்டுணர்ந்த உண்மை சொல்கிறது.....அவள் நொந்து போகிறாள்.....அவன் வருந்தி கெஞ்சுகிறான்...மன்னிக்க வேண்டுகிறான்... அவள்... முடியாது என்று சொல்லி கிளம்பி விடுகிறாள்..... ஆறு மாதங்கள் பேச்சு வார்த்தை இல்லை ...மனம் உடைந்து இனி அவள் தன் வாழ்வில் இல்லை என்று நினைக்கும் போது அவள் தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டுகிறாள்....

அதன் பிறகு.. மூன்று வருடம் ஓடுகிறது.... படிப்பு முடிகிறது...அவன் தாய்க்கு துணையாக பள்ளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...... அப்போது பில் கேட்ஸ்.. இந்தியாவுக்கு சுற்றுலா வருகிறார்.... இல்லாத மக்களுக்கு தன் டிரஸ்ட் மூலம் உதவ நினைக்கிறார்...... அந்த நினைப்பில் மாதவ் ஜாவின் பள்ளியும் சேர்கிறது..... அவருக்கு முன் மேடையில் ஆங்கிலத்தில் அவன், ஒரு பேச்சு கொடுக்க வேண்டிய நிலை.... அதற்கு ஆங்கிலம் நன்றாக கற்றுக் கொள்ள அவன் கிராமத்தில் இருந்து பீகார் செல்கிறான்....

அங்கு மீண்டும் ரியா ரீஎன்ட்ரி...

அவள் விவாகரத்து வாங்கி வந்திருக்கிறாள்.. தனியாக வேலை செய்கிறாள்..... தன் பணக்கார வீட்டை சாராமல் வாழக் கற்றுக் கொள்கிறாள்..அந்த மூன்று வருடத்திலும் அவன் மனம் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது... அவளை மீண்டும் சந்தித்ததில் தன் காதலை மீண்டும் சொல்ல முயற்சிக்கிறான்...... அவளோ நாம் நண்பர்களாக இருப்போம் என்கிறாள்... அவளுக்கு சுய கழிவிரக்கம் இருப்பதை நாம் உணர முடியும்... அவனின் காதலை புரிந்தவளாகவேதான் அவள் ஆரம்பம் முதல் இருக்கிறாள்...எல்லாப் பெண்களையும் போல.. புதிரை சுமந்தவளாகவே இருப்பதில்... பெண் என்பது கூடுதல் பலம்... அவன் ஆங்கிலம் கற்க உதவுகிறாள்... அவனோடு அவன் வீட்டில் தங்குகிறாள்... தான் ஒரு விவாகரத்து ஆனவள் என்பதும்.. தான் அவனுக்கு வேண்டாம் என்றும்.. நினைப்பவளாகாவே அவள் இருக்கிறாள்...ஆனாலும்.... பெண் மனம்... கசிகிறது... அது அன்பை தேடுகிறது.... தன்னையே சுமந்து கொண்டு வாழ்பவனை நினைத்து உள்ளுக்குள் அழுகிறது.... ஒரு நாள் அவனை ஆசையாக அருகில் அழைத்து படுத்துக் கொள்கிறாள்... அந்த அரவணைப்பில் அவள் நிம்மதியாக தூங்குகிறாள்... அடுத்த நாள் பில் கேட்ஸ் முன்னால் ... ஆங்கில பேச்சு.. பிரமாதப் படுத்துகிறான்......அதற்கு பயற்சி கொடுத்த ரியா.. முகம் சிவக்க.. பூரிப்போடு மக்களோடு மக்களாக பார்த்துக் கொண்டே காணாமல் போய் விடுகிறாள்... பின் அவளைத் தேடி.. அவன் எதிர் கொள்ளும் சம்பவங்கள்.... வழக்கமானது என்றாலும்.. வார்த்தைக்கு வார்த்தை நம்மை...கசிந்துருகி காதலிக்க வைத்து விடுகிறார்......சேத்தன்..

கேன்சரோடு எங்கு சென்றால் என்றே தெரியாமல் தவித்து தடுமாறும் மாதவ் ஜாவுக்கு......சேத்தன் பகத், சேத்தன் பகத்தாகவே கதைக்குள் நுழைந்து சில பல டிப்ஸ் கொடுக்கிறார்... சுய பச்சாதாப விமர்சனம் ஆங்கங்கே.. எள்ளலாக வீசுகிறது......260 பக்கம்..... பக்கத்துக்கு பக்கம் சுவாரஷ்யம் என்று கூறுவது சரியாக பொருந்தியது.... ஆங்கங்கே தனியாக சிரிக்கவும்... மௌனிக்கவும்.. விட்டால் அழவும் செய்து விடும். ஒரு சாமானியக் காதல் கதை தான்.. ஆனால் காதலின் வெளிச்சம் வாழ்கையின் கீற்றைத் திறந்து விடுவதைக் கண் கூடாக சொல்வது... எழுத்தின் பலம்..அவளைத் தேடி நியூயார்க்கில் அவன் சுற்றுவது... காதலின் வரம்.... அது தேடலில் திறக்கப்படும்... இதயத்துக்கானது.... உண்மையை ஒரு போதும் மூடி வைக்கவே முடியாது... என்பதன் வெளிப்பாடு... அவன் நிஜத்தின் வேராக அவளின் நிழலையும் கண்டு பிடிப்பதில் வாழ்க்கையின் அர்த்தம் நிரம்புகிறது..

'போடி வெங்காயம்'னு விட்டு போற பசங்க மத்தியில்.. மாதவ் ஜா.. மிகச் சிறந்த மனிதனாக...தன்னம்பிக்கை நிறைந்த போராட்டக் காரனாக...வேண்டியதை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்... உதாரண வாலிபனாக மிளிர்ந்து நிற்கிறான்....அவனை அவள் சேருவதில்தான் உண்மை மேலோங்குகிறது.... .. அதுதான்.. இறுதியில் அவனைக் கண்டதும்.. 'இனி உன்ன விட்டு போக மாட்டேன்....' என்று ஓடி வந்து மெல்ல கட்டிக் கொள்ளும் ரியாவின் ஒப்புக் கொடுத்தல்... காதலின் வெற்றியாகவே கொண்டாடப் படுகிறது...

ஒன்று மட்டும் புரிகிறது... விட்டு செல்லும் எந்தக் காதல் பின்னாலும் ஒரு மிகச் சிறிய சுயநலம் மட்டுமே இருக்க முடியும்..அதன் பிறகு எந்தக் காரணம் ஒளிந்திருந்தாலும் அதைப் பற்றி நான் பேசவில்லை...

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Jan-16, 2:40 pm)
பார்வை : 123

மேலே