மனசெல்லாம்
{ மனசெல்லாம் என்ன இது படித்து தான் பாருங்களேன் }
இலேசான காற்று விசிக்கொண்டிருக்க,அதன் விச்சினால் மணல்கள் எழும்ப,சுற்றிலும் பாலைவனம் போல தோற்றமளித்தது.நீண்ட நெடும் தொலைவில், மணல்களின் துகள்களின் வழியே ஒரு சிறு பெண்,தனியே ஓடி வந்தால்,அவள் ஓட ஓட தூரம் குறையவுமில்லை,அவளின் ஆவலும் குறையாது அதிகரித்து இருந்தது.அவளின் கண்கள் கடலில்,காற்றினால் அசைந்தாடும் தோனிப்போல அங்கும் இங்கும் அசைந்தாடியது.அந்த அசைவிற்கிணங்க சென்னி வரைகொண்ட அவளின் இரட்டை பின்னலிட்ட கூந்தலும் அசைந்தாடியது.காற்றிலே பறக்கும் பட்டத்தைப்போல் அவள் கண்கள் எதையோ ஆவலோடு தேடியும் கிட்டாது விடாய்திருந்தால்.கண்கள் அது வருந்ததொடு அலைப்பாய,ஒரு கதவினை கண்டு அருகில் செல்கிறாள்.சுற்றி எங்கிலும் நடு இரவின் அமைதி.கதவினை மெல்ல திறக்க,கண்கள் அது ஏதோ பொக்கிஷ பேட்டியினை கண்டவன்ப்போல மகிழ்ச்சியடைந்தது.சுழிந்து இருந்த உதட்டில், மொட்டு அது மெல்ல மலரும் அழகாய் மலர்ந்தது ஓர் சிரிப்பு.வாயினை திறந்து அவள் கூரிய முதல் வார்த்தை கண்டுக்கொண்டேனே மட்டிக்கொண்டாயா ஏஏஏ.....மெல்ல மெல்ல ஒரு ஒரு நபராய் அவள் கண்டுபிடிக்க சுற்றிலும்,பூ பூக்கும் சத்தம்போல் குழந்தைகளின் சிரிப்பும்,மலரின் வாசம்ப்போல் அவர்களின் மனமும்,பாலைவனம் மலர் சோலையானது,
[ என்ன ஒரு அழகிய காட்சி.சிறுவர்கள் அங்கே என்ன செய்கின்றனர் தெரிகிறதா ? பரவயில்லையே கண்டுபிடித்துவிட்டிர்களே சரிதான் அவர்கள் தங்களின் தெருவில் தான் எப்பொழுதும் போல கண்ணாம்பூச்சி விளையாடுகின்றனர். அடடே அங்கே என்ன குழப்பம் குழந்தைகளின் சிரிப்பு காணவில்லையே ]
குழந்தைகளின் மகிழ்ச்சி அது குழப்பம் அடைய ,ராதிகா அக்கா உங்கள் தங்கை சிம்தியை காணும் பயமாக உள்ளது.பயப்பட வேண்டாம் ரம்யா, இங்கே தான் ஒளிந்திருப்பால்,கண்டுபிடித்துவிடலாம்.சிம்தி எங்கே ஒளிந்திருக்கிறாய் ....
[ அனைவரும் ஒரு ஒரு புறமும் சென்று தேட ...]
[ அலறல் சத்தம் கேட்க தொடங்கியது அம்மா அம்மா என்னை காப்பாற்றுங்கள்.அலறல் அதிகரித்தது ]
- தொடர்ச்சியினை நாளை காண்போம் !