தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து7---ப்ரியா
(முன்கதைசுருக்கம்:வசந்துடன் ரியாவும் சேர்ந்து கம்பெனி விஷயமாக பெங்களூருக்கு செல்லத்தயாராகுகிறாள்.கம்பெனி பற்றிய பலவிஷயங்களை ரியாவிடம் பகிர்ந்துகொள்கிறான் வசந்த்)
வீட்டிற்கு வந்ததும் அவளது செல்போன் சிணுங்க எடுத்துபார்த்தாள் வசந்த்..
வசந்த்-ன் அழைப்பை பார்த்ததும் வந்தனாவைப்பார்த்தாள் ரியா???
"எடுத்து பேசு" என்று சைகை செய்தாள்.
ஹலோ! என்றதுமே; வீட்டுக்கு வந்துட்டீங்களா?நாளைக்கு நானே வந்து உங்கள அழைத்துவிட்டு செல்கிறேன் ரெடியா இருங்க....அப்புறம் எல்லாம் வந்து பேசிக்கலாம் வீட்டுல சொல்லிட்டிங்களா?என்றான்?
ஆமா! சார் சொல்லிட்டேன்.
ரெடியா இருக்கேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
என்னடி பண்றது தெரியாம இறங்கிவிட்டேன் இப்பொழுது நாமளே மாட்டிக்கப்போறோம்னு தோணுது என்றாள்,
ஒண்ணும் ஆகாதுடி நானிருக்கேன் இல்ல நான் சொல்றமாதிரி நடந்துக்கோ, அப்டியே பிரச்சனை வந்தாலும் அது எனக்குதான் உனக்கு இல்ல ஓகே......தைரியமா இரு என்றாள் வந்தனா.
நம்ம திட்டப்படி அவனோட சொத்து டாக்குமெண்ட்ஸ் மற்றும் தயாரிப்பு ரகசியங்கள் மற்றும் நிறுவன தகவல்களையும் முழுமையாக நாம் கையகப்படுத்திக்கொண்டு வரும் வரை அவனுக்கு சலாம் போட வேண்டியதுதான் அதன்பிறகு எல்லாத்துக்குமே தலைமை நாம்தான் நமக்கு கீழே அவன் நாய் மாதிரி தாங்கி தாங்கி வரவேண்டும் என்று ஆவேசம் போங்க பேசினாள்.......!????
அதன் பின் என்னை காதலிக்கிறேன் ஏற்றுக்கொள் என்று வருவான் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சிரித்தாள் வந்தனா....!
சரிடி எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்........கொஞ்ச நேரம் தூங்குறேன் கீது வந்ததும் எழுப்பி விடு என்று சொல்லிவிட்டு தூங்கசென்றாள் ரியா...
தன் தோழி தனக்காக தைரியமாக நடத்தும் நாடகத்திற்காக அவளுக்காக சிலதுளி கண்ணீர்விட்டாள்....!
டைரியிருந்த அவனது புகைப்படத்தை எடுத்து மெல்ல தடவி பார்த்தாள் வந்தனா அப்போது கீது வரும் சத்தம் கேட்கவே டைரியை மறைத்து வைத்துவிட்டு கண்ணையும் துடைத்து விட்டு வெளியே வந்தாள்.
நீ வந்ததும் ரியா எழுப்ப சொன்னாள் ஆனால் இப்போதுதான் படுத்தாள் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் அழைக்கலாம் நீ ரெடியா இரு சமையலை முடித்துவிட்டு கோவிலுக்கு போயிட்டு வருவோம் என்றாள் வந்தனா.....
மூன்றுபேரும் கோவிலுக்கு கிளம்பினர் "நாளை அவன் கூட தனியாக செல்கிறேன் சாமி எந்த ஒரு தவறுதலும் நடந்துவிடக்கூடாது பயணமும் இலகுவாய் அமைய வேண்டும்"என்று தெய்வத்திடம் வேண்டிக்கொண்டாள்....!
கீதுவுக்கு மட்டும் என்னவோ இந்த விஷயம் பிடிக்கவில்லை.
வந்தனாதான் இவ்வளவு பிடிவாதமாய் அவனை பழிவாங்க துடிக்கிறாள்......."நாம் அவள் மனதை பக்குவப்படுத்தி பேசி இந்த விஷயத்தை முடித்து விடலாமே" என்று ரியாவிடம் சொல்ல நினைக்கும் போதெல்லாம் அதற்கேற்ற சூழ்நிலை இல்லாமல் போக சொல்ல முடியாமல் தவித்தாள் கீது......
சரி இவள் நல்ல படியாய் வேலையை முடித்துவிட்டு வரட்டும் அதன் பிறகு வசந்த் மற்றும் வந்தனாவிடம் பேசி புரிய வைக்கலாம் என்ற முடிவுடன் இருந்தாள் கீது!
வசந்த் ரியாவுக்கு போன் செய்து" இன்னும் 30 நிமிடங்களில் உங்கள் வீட்டிற்கு வருவேன் ரெடியா இருங்க"என்றவன் முகவரியையும் பெற்றுக்கொண்டான்.........
அவன் திடிரென வருவேன் என்றதால் வந்தனாவை தனியே இரு வெளியில் வரவேண்டாமென்று சொல்லிவிட்டு கீதுவும் ரியாவும் லக்கேஜுடன் அவனது வரவை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கொஞ்சம் பதற்றமாகதான் இருந்தது இருவருக்கும்,,,,அதற்குள் அவன் வந்து விட அவசரவசரமாக காரில் ஏறிக்கொண்டாள்.
இருவரும் கம்பெனிக்கு சென்றனர்.........
வசந்த் கம்பெனியில்......
இந்த ப்ராஜெக்ட் மட்டும் நமக்கு கைக்கொடுத்தால் உள்நாடு மட்டுமில்லை வெளிநாடுகளிலும் நமக்குதான் பெஸ்ட் நிறுவனம் என்ற பெயர் கிடைக்கும் என்று சந்தோஷமாய் சொன்னான்! நம்ம கம்பெனி சார்பாக நான் மற்றும் ரியா இருவரும் செல்கிறோம்.
நம்நாட்டிலுள்ள பிரபலமான நிறுவனங்களின் முதலாளிகளும் வெளிநாட்டு நிறுவன தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்....இதில் அனைவருமே அவரவர் மாடல்களை சப்மிட் பண்ணுவோம் எது பெஸ்ட் மற்றும் புதுசா இருக்குதுன்னு பார்த்து செலெக்ட் பண்ணப்போறாங்க.
என் வடிவமைப்பு திருப்தியாகத்தான் உள்ளது இருந்தாலும் மனது படபடக்கிறது......இதுல மட்டும் ஓகே ஆச்சிதுன்னா நிறைய கோடிகள் இலாபம் கிடைக்கும் எனக்கும் உங்களுக்கும் நல்லதே.;;;என்று சொல்லி தன்னம்பிக்கையுடன் புன்னகைத்தான்.........!
அனைவரும் அவரவர் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்....பார்ப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
கிளம்பும்போது ராமிடம் என்னென்னவோ ரகசியமாய் பேசிவிட்டு காரில் உட்கார்ந்தான்.
காரின் பின்னிருக்கையில் வசதியாய் அமர்ந்து கொண்டாள் ரியா.
இருவரும் பெங்களுரை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருருந்தனர்.....!
கீதுவுக்கு ஊரிலிருந்து போன் வந்தது பாட்டிக்கு உடம்பு சரி இல்ல உன்ன பார்க்கணும்னு சொல்றாங்க உடனே கிளம்பி வா என்று அழைத்தனர்.
ஒருவேளை பாட்டிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? என்ற பயத்தில் அலுவலகத்துக்கு 2நாள் விடுப்பு கொடுத்துவிட்டு கிளம்பத்தயாரானாள்,
அப்பொழுது ரியாவுக்கு கால்பண்ணி விஷயத்தை சொல்ல? "வந்தனாவையும் அழைத்து செல் கீது என்று அவளை தனியே விட்டுவிட்டு செல்லவேண்டாம்" என்றாள்...!
சரிடி!என்று சொல்லிவிட்டு அவளையும் கிளம்ப சொன்னாள் கீது...!
காரை ஓட்டிசென்றவன் திடீரென ரியாவை திரும்பி பார்க்க??
ஐயோ;ஆவேசத்தில் ஆர்வக்கோளாறில் வந்தனா பெயரை சொல்லிவிட்டோமே என்னப்பண்றது??????
ம்ம்ம்....ஏதாவது சமாளிப்போம் என்பதுபோல் அவனைப்பார்த்தாள்............!
தொடரும்....!