அத்யந்த உறவுகள்

மழைத் தூரலில்
நனைகிற சுகமும்
காதல் நினைவினில்
உள்ளே நனைகிற சுகமும்....

பறவைகள் வானில்
சிறகு விரித்திடும் அழகும்
கற்பனை நெஞ்சில்
சிறகு விரிக்கும் அனுபவமும் ....

நீரோடையின் மெல்லிய ஓசையில்
சென்றிடும் சலனமும்
நெஞ்சின் நினைவோடையில்
பழைய நினைவுகளின் இனம் தெரியா ராகமும் ...

வண்ணங்களில் வானவில்
வருகை தரும் அழகும்
கலைந்து போகும் போது
தரும் வருத்தமும்
நட்பும் உறவும் சேர்ந்து வரும் போது
தரும் இன்பமும்
பிரிந்து செல்லும் போது
தரும் துன்பமும்...

மனிதவாழ்வில் இயற்கை
மனித உணர்வுகளுடன் கொண்ட
அத்யந்த உறவுகள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Jan-16, 6:46 pm)
பார்வை : 133

மேலே