மழலையின் புன்னகை

தீபாவளி மத்தாப்பு
பொங்கல் கோலம்
புத்தாண்டு மகிழ்ச்சி

காலைக் குயிலோசை
மாலைச் சூரியன்
மதிய உறக்கம்

மிதமான குளிர்
இதமான காற்று
சுகமான பாட்டு

பசுமையான மலைப்பாதை
ரசிக்கவைக்கும் வெண்மேகம்
பசியைப்போக்கும் முதல்கவளம்

எழுதிய முதல்கவிதை
பழகிய முதல்நட்பு
இதுவே மழலையின் புன்னகை...!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Jan-16, 6:45 am)
பார்வை : 12497

மேலே