எனக்காக பிறந்தவளா 5
Episode 5 : எனக்காக பிறந்தவளா ???
மணல் தூசிகளுகுள் கலவரம் . வாகனங்கள் பூமியில் உள்ள மொத்த குப்பைகளையும் நடமாடும் ஜீவன்களின் கண்களில் வீசுகிறது . இந்த புழுதி காற்று வசந்த்திற்க்கு மட்டும் தென்றல் போல்தான் இருந்தது . காதல் எத்தனை அற்புதமானது அவளுடன் இருந்த நொடிகளை நினைக்கும் போது அவனது பாவனைகள் சிரிக்கும் விதம் எல்லாம் மாறி போனது . பெண்னெ உன் நினைவுகள் தான் என்னை இப்படி பண்ணுது, ஏன் எத்தனை காலம் உன்னை பார்க்காமல் போனேன் . உன்னை காணதான் இத்தனை காலம் வளர்ந்தேனா ? இது போலலாம் யோசனை செய்வது அவனுக்கு பிடித்திருந்தது .
யாரிடமாவது இதெல்லாம் சொல்லனும் ரவியிடம் சொல்லலாம் ஆனா அவனுக்கு காதல் என்னது அதன் மென்மையான உணர்வுகள் என்னது எதுவும் அவனுக்கு தெரியாது சதா Bike பத்திதான் பேசுவான் bore அடிப்பா , நவீன் பொருத்தமானவன் பெண்களின் குணத்தை தெளிவாக தெரிந்தவன் , உன்னமயா காதலிச்சு எமாற்றபட்டவன், அவனிடம் காதலை பற்றி பேச தோனியது, டைரியில் எழுத தோனியது . அவளிடம் தன் காதலை முழுமையாக சொல்ல தோனியது . எப்பவாவது அவன் Rap music கேட்க்கும் பழக்கம் மறந்து போய் இருந்தான் . இனி tvல முழுநேர காதல் பாடல்கள் ஓட வைக்க அசையாக இருந்தது .
காதல் பாடல்களை கேட்கனும் காதல் வரிகளை படிக்கனும் என்றெல்லாம் ஆசைகள் பிறந்தது .
சிக்கிக்கொண்டிருந்த Headset-ஐ மெள்ள பிரித்து . காதல் பாடலை கேட்க துடித்தான் . அணிந்து K-வை தேடி காதலை பிடித்து பாடலை தேர்வு செய்தான் .
" காதலேனும் தேர்வு ஏழுதி காத்திருந்த மாணவன் நான் " அவனுக்காவே எழுதியாது போல் இருந்தது இதுவரை எப்படி ஒரு வரி அவனை இன்பம் செய்தது இல்லை .
அவனது Bus வந்தது plate number 17D-il ஏறி படிகளில் தொங்கினான் . உள்ளே இடமிருந்தும் போக அவன் மனம் விரும்பவில்லை . காரணம், அதை அவன் சொவ்கரியம் என்று நினைத்தானோ, காற்றோட்டம் என்று நினைத்தானோ, கேத்துனு நினைத்தானோ அது அவனுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது .
அந்த பாடல் பயணம் முழுவதும் மறுபடி மறுபடி தொடர்ந்து அறுக்காமல் கல்லூரி வாசல் வரை வந்தது . அவன் class room கூட இன்று புதுசாக தெரிந்தது அழகாக இருந்தது .
ரவி : அங்க பாருடா நம்ம class remeo எப்படி வந்துனு இருக்கானு .
நவீன்: யார டா சொல்ற ?
ரவி : வேற யாரு இதோ இவன் தா, முஞ்ச பாரு colgate விளம்பரம் மாறி இள்ளிச்சுனே இருக்கான் .
நவீன்: இது எப்பல இருந்து டா !
வசந்த்:இந்த one weeh ah தான் மச்சி .
நவீன் : யார லவ் பண்ற .
ரவி : அதான்டா இவன் வீட்டுக்கு பக்கத்துல நந்தினி fancy ல ஒரு பொண்ணு இருக்குமில்ல அவள தான் .
நவீன்: டேய் ! ஏன்னடா இப்படி இறங்கிட்ட .
வசந்த் : Love மச்சி Love ( உணர்வுகளோடு )
ரவி : காதல் ( முச்சை உள்ளிழுது) காதல்...( உணர்வுகளோடு )
வசந்த் : ஆமா காதல் தான் டா .
ரவி : பாத்தல பையன் ஏன்னமா feel பண்றனு .
நவீன் : இனி ஒன்னும் செய்ய முடியாது டா, stage ah தான்டிடா . ஒரு 6 months இப்படிதா சிரிப்பான், நம்மகிட்ட ஒழுங்க பேச மாட்ட, தனியா இருக்க மரதடி தா அவனுக்கு சொர்கம் .phone watsapp msg தான் அவனுக்கு உலகம மாற போது , அவன கண்டுகாம விடு.
வசந்திற்க்கு வெறுப்பாக இருந்தது .
வசந்த் : போதும் டா ! என் லவ் தா இன்னிக்கு உங்க target ah .
நவீன்: இத வீட்டுட பாரு லவ் அ பத்தி தப்பா பேசின கோவபடுவான் . ( மீண்டும் ரவி சிரித்தது கோவமாக இருந்தது வசந்திற்க்கு )
வசந்த்: லவ் ah பத்தி என்ன தெரியும் சிரிக்கற?? அடங்கு . லவ் ரொம்ப ஆழகானது டா என்ன மாறி true லவ் பண்றவனுக்கு தா அதலாம் தெரியும் . இச்ச! லவ் பண்ணு பாரு அப்ப தெரியும் .
நவீன் : உண்மைதா வசந்த் . நம்ம ஒன்ன இருக்க போறதே இன்னும் கொஞ்ச நாள்தா வசந்த், அப்பறம் அவன் அவ வேலைய தேடி போய்டுவொம், உன்ன பாத்த வேற full time ah love feel ல இருக்குறவ மாறி தெரியுது . அத உன்ன miss பண்ணகூடாதுனு தா இந்த advise . நம்ம final year enjoyment ah miss பண்ணிடாத வசந்த் advise .
வசந்த்: டேய் ! சாமி முடிச்சுடியாடா, தாங்கல உன் .
நவீன் : மச்சி !! இதுவரைகும் நீ சொன்ன இல்ல அதெல்லாம் ஒன்னுமே இல்ல, அத விட மரண feel laam இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும் டா ! (வசந்திற்க்கு வெறுப்பாக இருந்தது)
ரவி : ஆனா டேய் ! ஒரு மொக்க figure ah love பண்றதுகு நீ இவ்ளோ scene போடுற பாரு அத தாங்க முடியல .
ரவி கண்ணத்தில் ஒரு அறை தரும் அளவிற்கு கோவமாக இருந்தது .
வசந்த் :ஏய்! அவ என் ஆளு என் கண்ணூக்கு அழகா தெரிஞ்சா போதும், அவ ஒன்னும் makeup பொம்ம இல்ல , அவ எனக்கு பிடிச்ச அழகு . எனக்கு அவ தா அழகு அவ மட்டும் தா அழகு .
ரவி ஒரு முறை நவீனை பார்த்துக்கொண்டான் . அவர்கள் பார்வையில் ஒரு கேலித்தானம் இருந்தது . அது அவனுக்கு வருத்தமாக இருந்தது .
இந்த அவஸ்தைய மறக்க அவனிடம் இருந்த ஒரே மருந்து மைதிலியின் நினைவுகள்தான் . தனது நேற்றைய கனவு சிரிப்பாக இருந்தது . அந்த பெண் மைதிலியாக இருந்திருந்தால், அவள் கைத்தொட்டு ஒரு முத்தம் ஈட்டு தன் மார்போடு அனைத்து இருந்தால் போதும் அந்த இன்பம் போதும் அதிலே மொத்த உயிரும் போயிரும் . அவன் மூச்சு எங்கோ அடைத்துகொண்டது . சுவாசிபதில் சிரமம் இருந்தது,
உடல் தரையிலிருந்து ஒரு அடி மேலே போகிவிட்டது . நிலவை பக்கத்தில் பார்ப்பது போல இருந்தது அவன் கண்களுக்கு அந்த நினைவுகள் . இன்று அவன் கண்கள் கண்முன் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் பதிவு செய்யவில்லை. கனவுகள் மட்டும் அவனை சுற்றி வட்டமிட்டதில், கல்லூரியில் அரட்டை அடிக்கும் பழக்கம் மறந்து போனது . Leg-ins போட்ட பெண்னை கூட ரசிக்க தோனவில்லை . lecturer-ன் கணிதம் கூட வெறுப்பாக தெரியவில்லை . நண்பர்கள் அடிக்கும் நல்ல jokes கூட சிரிப்பு செயற்கையாக வந்தது . யாரையும் வெறுக்க தோனலை,மைதில்லியை தவிர எதிரில் ஒருவரும் தெரியவில்லை .
இன்றைய கல்லூரி நாள் இத்தனை விரைவில் கடந்தது கூட அவனுக்கு தெரியவில்லை . அவன் mobile அதிரத்தொடங்கியது மைதிலியிடம் இருந்து ஒரு miss call மற்றும் நிறுவனதிடம் இருந்து இரு msg வந்தது .ஒரு கனம் சந்தோஷம் மைதிலிக்கு அவசரமாக call செய்கிறான் .
மைதிலி : வசந்த் உன்ன பாக்கனும் வசந்த் . எங்க இருக்க ??